கம்பராமாயணம் 4363 · கிட்கிந்தா 10.5

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நஞ்சம் அன்னவரை - நஞ்சு போன்ற கொடியவர்களை; நலிந்தால் அது வஞ்சமன்று - தண்டித்தால் அது கொடுமையாகாது; மனு வழக்கு ஆதலால் - (அவ்வாறு நலிவது) மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ள நீதியாதலால்; (இதை); அஞ்சில் ஐம்பதில் - ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும்; ஒன்று அறியாதவன் - தக்கது தகாதது என்பதனை அறியாதவனான அச் சுக்கிரீவனது; நெஞ்சில் நின்று நிலாவ - மனத்தில் நன்றாகப் பதிந்து விளங்கும்படி; நிறுத்துவாய் - (சொல்லி) நிலை நிறுத்துவாய்.

கொடியவரைக் கொல்லாவிட்டால் உலகம் பலவாறு நலிவுபட்டு வருந்தும்; ஆதலால், நல்லவர்களைப் பாதுகாத்தற்பொருட்டுத் தீயவரை அழித்தல் தருமச் செயலாம் என்பது. அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் - அஞ்சிலும் (வயது) ஒன்று அறியாதவன்; ஐம்பதிலும் ஒன்று அறியாதவன்; அதாவது இளமையிலும் முதுமையிலும் செய்வது அறியாதவன். 'ஆறிலறியார் நூறிலும் அறியார்'; 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டில்' என்னும் பழமொழிகள் இங்கு நினைக்கத் தக்கன. உலக வழக்கு நவிற்சி அணி. அஞ்சு - போலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To strike down those who are like poison
  2. is no treachery; it is the law of Manu; and so,
  3. in the heart of him who knew nothing at five and knows nothing at fifty,
  4. make this stand firm and shine.'

What the poem says

Irāmaṉ insists that punishing poisonous evildoers is not cruelty but law, as laid down in the code of Manu: destroying the wicked protects the good.

Ilakkuvaṉ is to fix this firmly in Cukkirīvaṉ's mind. Irāmaṉ describes him with a proverb: someone who did not learn sense at five will not have it at fifty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nañcam aṉṉavarai nalintāl atu
vañcam aṉṟu; maṉu vaḻakku; ātalāl
añcil aimpatil oṉṟu aṟiyātavaṉ
neñcil niṉṟu nilāva niṟuttuvāy.