கம்பராமாயணம் 4364 · கிட்கிந்தா 10.6

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"ஊரும் ஆளும் அரசும் நும்சுற்றமும்
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள்
வாரும்; வாரலிராம் எனின் வானரப்
பேரும் மாளும் " எனும் பொருள் பேசுவாய்.

பொருள் · Meaning in Tamil

ஊரும் ஆளும் - (உங்கள் நகரமான கிட்கிந்தையையும், குடிமக்களையும்; அரசும் உம் சுற்றமும் - அரசாட்சியையும் உங்களது உறவினர்களையும்; நீரும் ஆளுதிரே எனின் - நீங்களே ஆள விரும்பினால், நேர்ந்த நாள் - (சீதையைத்) தேடுவதற்காக வர ஒப்புக்கொண்ட இக் கார்த்திகை மாதத்தில்; வாரும் - (உடனே புறப்பட்டு) வர வேண்டும்; வாரலிர் எனின் - (அவ்வாறு) வராமல் போவீரானால்; வானரம் பேரும் மாளும் - வானரம் என்னும் பெயரும் (இவ்வுலகில்) இல்லாது ஒழியும்; எனும் பொருள் பேசுவாய் - என்னும் உண்மையை (சுக்கிரீவன்) முதலானவரிடம் நீ உணர்த்துவாய்.

நீரும் - உம் இசை நிறை: அசை நிலையுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '"Your city, your people, your kingdom and your kin,
  2. if you yourselves wish to go on ruling them, on the day agreed
  3. come; if you do not come, even the name
  4. of monkey will perish": say words to that effect.'

What the poem says

Irāmaṉ's message is a plain ultimatum. If Cukkirīvaṉ and his followers want to keep their city, their subjects, their throne and their families, they must come at once, in the month they agreed to begin the search for Cītai. If they do not, the very name 'monkey' will vanish from the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"ūrum āḷum aracum um cuṟṟamum
nīrum āḷutirē eṉiṉ nērnta nāḷ
vārum; vāralir ām eṉiṉ vāṉarap
pērum māḷum" eṉum poruḷ pēcuvāy.