கம்பராமாயணம் 4365 · கிட்கிந்தா 10.7

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"இன்னம் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி
துன்னினாரை " எனத் துணிந்தார் எனின்
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும்
நின்னலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய்.

பொருள் · Meaning in Tamil

இன்னும் இங்கு இவர்க்கும் - இனி வேறாக இப்போது இராம லக்குவராகிய இவர்களைக் காட்டிலும்; வலி துன்னினாரை நாடுதும் - வலிமையுள்ளவரை நாடித் துணையாகக் கொள்வோம்; எனத் துணிந்தார் எனின் - என்று (அச்சுக்கிரீவன் முதலோர் முடிவெடுத்தார்களென்றால்; உன்னைவெல்ல - உன்னை வெல்வதற்கு; உலகு ஒரு மூன்றினும் - மூன்று உலகங்களிலும்; நின் அலால் பிறர் இன்மை - உன்னையல்லாமல் வேறு யாரும் இல்லாமையை; நிகழ்த்துவாய் - அவர்களுக்கு (எடுத்துச்) சொல்வாய்.

பிறரால் வெல்ல முடியாத பேராற்றலோடு வேண்டுங்காலத்துத் தன்னைத் தானே அடக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவன் இலக்குவன் என்பது, 'நின்னலால் பிறரின்மை' எனவே உவமை நீக்கிய தோன்றல் இலக்குவன் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If they resolve, "We shall look further, for allies
  2. stronger than these two here",
  3. then make it known that in all three worlds there is no one
  4. but you yourself who could defeat you.'

What the poem says

If the monkeys think of finding stronger allies than Irāmaṉ and Ilakkuvaṉ, Ilakkuvaṉ is to tell them that in all three worlds no one could defeat him except himself.

The compliment says two things: Ilakkuvaṉ has no equal, and the only thing that can hold him back is his own self-restraint, which the coming scenes will test.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"iṉṉum nāṭutum iṅku ivarkku vali
tuṉṉiṉārai" eṉat tuṇintār eṉiṉ
uṉṉai vella ulaku oru mūṉṟiṉum
niṉ alāl piṟar iṉmai nikaḻttuvāy.