கம்பராமாயணம் 4367 · கிட்கிந்தா 10.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆணை சூடி - (இராமனின் கட்டளையைத் தலைமேற்கொண்டு; அடிதொழுது - அவனது திருவடிகளை வணங்கி, ஆண்டு இறை பாணியாது - அந்த இடத்தில் சிறு நொடியும் தாமதிக்காமல்; படர் வெரிந் - விரிந்த (தனது) முதுகில்; பாழ்படாத தூணி பூட்டி - அம்புகள் குறையாத அம்புப் புட்டிலைக் கட்டிக்கொண்டு; தொடுசிலை தொட்டு - தொடுப்பதில் வல்ல வில்லைக் கையில் பிடித்து; சிந்தையின் நீங்கலான் - மனத்தில் இராமனை நினைந்து கொண்டே; அருஞ் சேணின் நீங்கினன் - செல்வதற்கு அரிய நீண்ட வழியில் சென்றான்.
இராமன்பால் இலக்குவன் கொண்ட பக்திச் சிறப்பு இப் பாடலாற் புலனாகிறது. சிந்தையின் நீங்கலான் - இராமனது மனத்திலிருந்து நீங்காத அன்புத்தம்பி என்றும் கூறலாம். சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான்: முரண்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wearing the command on his head, bowing at his feet, there
- not lingering even a moment, on his broad back the never-emptying
- quiver strapped, taking up the bow made for shooting, over the hard
- long way he went off, yet never went from his brother's mind.
What the poem says
Ilakkuvaṉ accepts the order with reverence, bows at Irāmaṉ's feet and sets off at once with his quiver of inexhaustible arrows and his bow.
The last line plays on contrast: he 'left' and went a great distance, yet he 'never left' the mind. That may mean he never stopped thinking of Irāmaṉ, or that he never left Irāmaṉ's thoughts. The verse shows how devoted Ilakkuvaṉ is to his brother.