கம்பராமாயணம் 4368 · கிட்கிந்தா 10.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மெய்ம்மையின் ஓங்கிடும் ஆறு சென்றவன் - சத்தியத்தால் சிறக்கும் வழியில் இயங்குபவனாகிய இராமபிரானின்; ஆணையின் ஏகுவான் - கட்டளைப்படி செல்பவனாகிய இலக்குவன்; மாறுநின்ற மரனும் - குறுக்கே நின்ற மரங்களும்; மலைகளும் - மலைகளும்; நீறு சென்று - (தான் செல்லும் வேகத்தால்) தூளாக; நெடுநெறி நீங்கிட - நெடிய வழியில் (நீண்ட தூரத்தில்) சென்று பரவும்படியாக; வேறு சென்றனன் - புதுவழி அமைத்துக்கொண்டு சென்றான்.
பழக்கப்பட்ட வழியன்றாதலின் 'வேறு சென்றனன்' என்றார். காற்றில் பறந்து பரவும் துகள் நெடுந்தொலைவு போகுமாதலின் 'நெடுநெறி' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Trees and mountains that stood in his way
- turned to dust and scattered far along the long road,
- as he cut a path of his own, he who went by the command
- of the one who walks the way that rises through truth.
What the poem says
Ilakkuvaṉ, acting on the orders of Irāmaṉ, who keeps always to the path of truth, does not take the usual road. He makes his own path, and the trees and hills in his way are ground to dust by the force of his passing and blown far along the route.