கம்பராமாயணம் 4369 · கிட்கிந்தா 10.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒண்நிறக் கழல் சேவடி - ஒளிமிக்க நிறமுள்ள வீரக்கழலை யணிந்த (இலக்குவனின்) பாதங்கள்; ஊன்றலால் - அழுந்துவதால்; விண்உறத்தொடர் - வானுலகத்தைத் தொடுமாறு வளர்ந்துள்ள; மேருவின் சீர்வரை - மேருமலையின் (உயரத்தின்) எல்லையளவாக, மாதிரம் மண்உற - மலைகள் நிலத்திலே பொருந்த, புக்கு அழுந்தின - உள்ளே சென்று அழுந்தின; (அப்பொழுது) கட்செவி கண்உற - (பூமியைத் தாங்கும்) ஆதிசேடனாகிய பாம்பு கண்களுக்கு, தெரிவுற்றது - புலனாயிற்று.
கட்செவி - பாம்பு; இங்கே ஆதிசேடனைக் குறித்தது. உயர்வு நவிற்சியணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the full height of Mēru, which reaches up to the sky,
- the mountains sank down into the earth;
- the serpent came into plain view,
- as his red feet with their bright anklets pressed down.
What the poem says
A deliberate exaggeration shows Ilakkuvaṉ's force as he strides along. Wherever his feet, with their gleaming hero's anklets, come down, the mountains are driven into the earth to a depth as great as the height of Mount Mēru, and Ātiśēṣaṉ, the cosmic serpent who holds up the world, can be seen beneath.