கம்பராமாயணம் 4370 · கிட்கிந்தா 10.12

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெம்பு கான் இடைப் போகின்ற வேகத்தால்
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்
அம்பு போன்றனன் அன்று அடல் வாலிதன்
தம்பிமேல் செலும் மானவன் தம்பியே.

பொருள் · Meaning in Tamil

அன்று - அப்பொழுது; அடல் வாலியின் - வலிமையுள்ள வாலியின்; தம்பிமேல் செலும் - தம்பியான சுக்கிரீவனிடம் செல்லுகின்ற; மானவன் தம்பி - மனுகுலத் தோன்றலாகிய இராமன் தம்பியான இலக்குவன்; வெம்பு கானிடை - வெப்பம் மிகுந்த காட்டிலே; போகின்ற வேகத்தால் - செல்லும் வேகத்தினால், உம்பர் தோயும் - வானத்தை அளாவி நின்ற; மராமரத்து ஊடு செல் - ஏழு மராமரங்களின் இடையே துளைத்துச் சென்ற; அம்பு போன்றனன் - (இராம) பாணத்தை ஒத்திருந்தான்.

இராம பாணம் ஏழு மராமரங்களைத் துளைத்துச் சென்றதுபோல, இலக்குவன் தான் செல்லும் காட்டு வழியிலுள்ள மரங்களை அழித்துச் சென்றான் என்றபடி. உவமையணி, உம்பர் தோயும் மராமரம் - உயர்வு நவிற்சி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. By the speed with which he went through the scorching forest,
  2. he was like the arrow that passed through the marā trees that touch the sky,
  3. he, on that day, as he went against the brother of mighty Vālī,
  4. the brother of the man of Manu's line.

What the poem says

Ilakkuvaṉ rushes through the hot forest toward Cukkirīvaṉ, Vālī's brother, smashing the trees in his way.

The poet compares him to the arrow Irāmaṉ once shot through seven towering marā (sal) trees to prove his strength to Cukkirīvaṉ. The brother now moves like that same arrow, and the reminder is pointed, since that proof was what first won Cukkirīvaṉ's trust.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vempu kāṉiṭaip pōkiṉṟa vēkattāl
umpar tōṟum marāmarattu ūṭu cel
ampu pōṉṟaṉaṉ aṉṟu aṭal vālitaṉ
tampimēl celum māṉavaṉ tampiyē.