கம்பராமாயணம் 4371 · கிட்கிந்தா 10.13

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
சேடு சென்று கெடில் ஒரு திக்கின் மா
நாடுகின்றது நண்ணிய கால்பிடித்து
ஓடுகின்றதும் ஒத்துளன் ஆயினான்.

பொருள் · Meaning in Tamil

ஒரு திக்கின் மா - ஒரு திசை யானை; மாடு வென்றி - பக்கத்திலுள்ள வெற்றி பொருந்திய; ஓர் மாதிர யானையின் - மற்றொரு திசை யானையினுடைய; சேடு சென்று - இளங்கன்று விலகிச் சென்று; கெடில் - வழி தவறிச் சென்று விட்டால்; நாடுகின்றதும் - (அதைத்) தேடுவதாய்; நண்ணிய கால்பிடித்து - (அக்கன்று) சென்ற அடிச்சுவடுகளைப் பின்பற்றி; ஓடுகின்றதும் - விரைந்து செல்வதை; ஒத்து உளன் ஆயினான் - (இலக்குவன்) ஒத்தவன் ஆனான்.

பக்கத்தில் நின்ற ஒரு திசை யானையின் கன்று விலகிச் சென்று காணாமற் போய்விட்ட போது அதனோடு நட்புக்கொண்ட வேறொரு திசை யானை அதனைத் தேடுவதற்காக அடிச்சுவடுகளைப் பின்பற்றி விரைந்து செல்லும். அவ்வாறு செல்லும் திசையானை போன்றவன் இலக்குவன் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the calf of the victorious elephant of a neighbouring quarter
  2. has strayed and is lost, the great elephant of another quarter
  3. goes searching, following the tracks it left,
  4. and runs: like that he became.

What the poem says

In Indian cosmology eight great elephants guard the eight directions. The poet imagines one of them hurrying after the lost calf of a neighbouring elephant, following its footprints.

Ilakkuvaṉ, racing toward Kiṭkintai on Irāmaṉ's errand, is like that giant beast: huge, fast and single-minded in his search.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṭu veṉṟi or mātira yāṉaiyiṉ
cēṭu ceṉṟu keṭil oru tikkiṉ mā
nāṭukiṉṟatum naṇṇiya kāl piṭittu
ōṭukiṉṟatum ottuḷaṉ āyiṉāṉ.