கம்பராமாயணம் 4372 · கிட்கிந்தா 10.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருக்கன் மா உதயத்தினின்று - சூரியன் பெருமை பொருந்திய உதயமலையிலிருந்து; அத்தம் ஆம் பருப்பதத்தினை - அத்தமன மலையை அடைந்தது போல; பொன் ஒளிர் மேனியான் - பொன்னிறத்தோடு விளங்கும் மேனியையுடைய இலக்குவன்; உருக்கொள் - பெரிய வடிவு கொண்ட; ஒள்கிரி ஒன்றினின்று - ஒளிமிக்க ஒரு மலையிலிருந்து (மாலியவான் மலை); ஒன்றினை - மற்றொரு மலையை (கிட்கிந்தையை); பொருக்க எய்தினன் - விரைவிலே சென்று சேர்ந்தான்.
இடையே தங்குதலும், தடங்கலும் இன்றி விரைந்து சென்று சேரும் இயல்பு சூரியனுக்கும், இலக்குவனுக்கும் பொருந்தும்.
சூரியன் உவமை, நிறத்திற்கும் மேனி ஒளிக்கும் ஆம். பொருக்க: விரைவுக் குறிப்பு. உதயகிரி - கிழக்கின் கண் உள்ள மலை; அத்தமனகிரி - மேற்கின் கண் உள்ள மலை; பருப்பதம் : மலை
ஆங்கிலம் · English translationAI
Translation
- From one great, shining mountain to the other
- he swiftly came, he of the gold-gleaming body,
- as the sun passes from the great mountain of its rising
- and reaches the mountain of its setting.
What the poem says
Ilakkuvaṉ crosses from Mālyavān, where the brothers spent the rains, to the mountain city of Kiṭkintai. He is compared to the sun travelling from the eastern mountain of sunrise to the western mountain of sunset.
The comparison fits in three ways: both travel fast, both travel without stopping, and Ilakkuvaṉ's body glows golden like the sun.