கம்பராமாயணம் 4373 · கிட்கிந்தா 10.15

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன் துணைத் தமையன் - தனக்கு உற்ற துணைவனும் தமையனுமான இராமனது; தனி வாளியின் சென்று - ஒப்பற்ற அம்பு போல விரைந்து சென்று; சேண் உயர் கிட்கிந்தை - மிக உயர்ந்த கிட்கிந்தை மலையை; சேர்ந்தவன் - அடைந்தவனான இலக்குவன்; குன்றினின்று - ஒரு மலையிலிருந்து; ஒரு குன்றினில் குப்புறும் - மற்றொரு மலையில் தாவிப் பாய்கின்ற; பொன்துளங்கு - பொன்னிறத்தோடு விளங்கும்; உளைச் சீயமும் - பிடரி மயிரினையுடைய ஆண் சிங்கத்தையும்; போன்றனன் - ஒத்து விளங்கினான்.

வலிமையிலும், பெருமித நடையிலும் தோற்றத்திலும் சிங்கம் இலக்குவனுக்கு உவமையாகும். தட்டுத்தடங்கல் இல்லாமல் குறித்த இடத்திற்கு விரைந்து சென்று சேர்வதால் இலக்குவனுக்கு இராமபாணம் உவமையாயிற்று. குப்புறுதல் - குதித்தல். சேண் உயர் - ஒரு பொருட்பன்மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the matchless arrow of his elder brother and companion,
  2. he went and reached lofty Kiṭkintai;
  3. he was like, too, a lion with a gleaming golden mane
  4. leaping from one hill onto another.

What the poem says

Ilakkuvaṉ arrives at Kiṭkintai, high in the hills. He has flown there like one of Irāmaṉ's arrows, straight to the target without a pause.

He is also like a golden-maned lion bounding from crag to crag, a picture of strength, proud bearing and fierce looks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉ tuṇait tamaiyaṉ taṉi vāḷiyiṉ
ceṉṟu cēṇ uyar kiṭkintai cērntavaṉ
kuṉṟiṉniṉṟu oru kuṉṟiṉil kuppuṟum
poṉ tuḷaṅku uḷaic cīyamum pōṉṟaṉaṉ.