கம்பராமாயணம் 4376 · கிட்கிந்தா 10.18

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்
தள மலர்த்தகைப் பள்ளியில் தாழ்குழல்
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர
விளை துயிற்கு விருந்து விரும்புவான்;

பொருள் · Meaning in Tamil

நளன் இயற்றிய - வானர வீரனாகிய நளனால் உருவாக்கப்பட்ட, நாயகக் கோயிலுள் - சிறந்த அரண்மனைக்குள்ளே; தளமலர் தகைப்பள்ளியில் - இதழ் நிறைந்த மலர்களைப் பரப்பி அமைக்கப்பட்ட அழகிய படுக்கையில், தாழ்குழல் இள முலைச்சியர் - நீண்ட கூந்தலையும் இளமையான முலைகளையும் உடைய மகளிர்; ஏந்து அடி தைவர - சிறந்த (தன்) கால்களை வருடிப்பிடிக்க; விளை துயிற்கு - உண்டாகும் தூக்கத்திற்கு; விருந்து விரும்புவான் - (தான் விருந்தாவதை விரும்புவனும்.

புதிதாக ஆட்சியைப் பெற்று அந்தப்புரத்திலே மகளிர் பலர் தன் அடிகளை வருட இனிய தூக்கத்தை மேற்கொண்டுள்ளான் சுக்கிரீவன் என்பது. நளன் - தேவ சிற்பியான விசுவகர்மாவின் மகன். ஏந்து அடி - மடியில் வைத்துக் கொண்டுள்ள பாதங்கள் என்றும் உரைக்கலாம். தூங்குவதற்குத் தைவரல் முதலியன துணையாய் இன்பம் பயப்பன. ஆதலால், அவற்றைத் துயிலுக்கு விருந்தென்றார். இதுமுதல் ஐந்து பாடல்கள் குளகச் செய்யுள்கள். விரும்புவான், விளங்குவான், வைகுவான், மயங்கினான், தயங்குவான் (4286 - 4290) என்ற சொற்கள் கிடந்தனன் (4291) என்ற வினைமுற்றைக் கொண்டு முடியும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the lordly palace built by Naḷaṉ,
  2. on a lovely bed strewn with petalled flowers, while long-haired
  3. young-breasted women stroked his raised feet,
  4. he longed to be a guest of the sleep that came over him;

What the poem says

The scene moves to Cukkirīvaṉ. This verse begins a five-verse sentence describing him, which ends with the word 'he lay' in the sixth.

In the splendid palace built by Naḷaṉ, the monkey architect who was son of the divine craftsman Viśvakarman, the new king lies on a bed of flowers while young women massage his feet, and he gives himself up to sleep. The contrast with Irāmaṉ's lonely suffering through the rains is sharp.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naḷaṉ iyaṟṟiya nāyakak kōyiluḷ
taḷa malart takaip paḷḷiyil tāḻ kural
iḷa mulaicciyar ēntu aṭi taivara
viḷai tuyiṟku viruntu virumpuvāṉ;