கம்பராமாயணம் 4377 · கிட்கிந்தா 10.19

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெள்ளியோர் உதவு அப்பெருஞ் செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம் களித்தான்; கதிர்ப்
புள்ளி மால்நெடும் பொன்வரை புக்கது ஓர்
வெள்ளி மால்வரை என்ன விளங்குவான்;

பொருள் · Meaning in Tamil

தெள்ளியோர் உதவ - தெளிந்த அறிவுடையவரான இராமலக்குவரால் வழங்கப்பெற்ற; பெருஞ்செல்வமாம் - பெரிய அரசாட்சிச் செல்வமாகிய; கள்ளினால் அதிகம் களித்தான் - கள்ளைக் குடித்ததனால் மிகுதியாகக் களிப்பில் மிதந்தவனாய்; கதிர்ப்புள்ளி - ஒளிக்கற்றைகளின் சேர்க்கையையுடைய மாநெடும் பொன் வரை - மிகப்பெரிய பொன்னிற மலையில்; புக்கது - புகுந்து தங்கக் கூடிய; ஓர் வெள்ளி மால் வரை என்ன - ஒரு பெரிய வெள்ளி மலை போல; விளங்குவான் - விளங்குபவனும்.

களிப்பை உண்டாக்குதல் பற்றிப் பெருஞ்செல்வத்தைக் 'கள்' என்றார். சுக்கிரீவன், ஆட்சிச் செல்வத்தைத் தானாகப் பெறவில்லை. இராமலக்குவரின் உதவியால் பெற்றான். இதனைத் 'தெள்ளியோர் உதவ' என்றதனால் விளக்கினார். 'செல்வமாம் கள்' - செல்வத்தால் ஆகும் மயக்கம்.

வெண்ணிறமுள்ள சுக்கிரீவனுக்கு வெள்ளி மலையையும், பொன்னிறக் கட்டிலுக்கு (அரண்மனைப்) பொன்மலையையும் உவமையாக்கினார். 'பொன் வரை புக்கதோர் வெள்ளி மால் வரையென்ன விளங்குவான்' - இல்பொருள் உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Drunk beyond measure on the toddy that was the great wealth
  2. the clear-minded ones had given him, he gleamed
  3. like a great silver mountain that had entered
  4. a huge, long, golden mountain dappled with rays;

What the poem says

Cukkirīvaṉ is intoxicated, and the poet makes it double: by drink, and by the royal wealth itself, which Irāmaṉ and Ilakkuvaṉ won for him and which goes to his head like toddy.

His pale body lying on a golden bed in the golden palace looks like a silver mountain set inside a golden one, an impossible picture that Tamil poetics calls a comparison with something that does not exist.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teḷḷiyōr utava peruñ celvam ām
kaḷḷiṉāl atikam kaḷittāṉ; katirp
puḷḷi mā neṭum poṉ varai pukkatu ōr
veḷḷi māl varai eṉṉa viḷaṅkuvāṉ;