கம்பராமாயணம் 4379 · கிட்கிந்தா 10.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தித்தியாநின்ற - தித்திக்கின்ற; செங்கிடை வாய்ச்சியர் - செங்கிடை போலச் சிவந்த இதழ்களையுடைய பெண்களின்; முத்த வாள் நகை - முத்துப்போல் வெண்ணிறமான புன்னகை செய்கின்ற; முள் எயிற்று - கூர்மையான பற்களிலிருந்து; ஊறுதேன் - சுரக்கின்ற தேன்; பித்தும் மாலும் - பித்தினையும் மயக்கத்தையும்; பிறவும் - காமம், மதம், மறதி, சோர்வு, துயில் முதலிய தாமசக் குணச் செயல்களையும்; பெருக்கலான் - மிகுதிப்படுத்துவதனால்; மத்த வாரணம் என்ன - மதங்கொண்ட யானைபோல; மயங்கினான் - அறிவு அழிந்தவனும்.
சுக்கிரீவன், மகளிரின் இதழ் அமுதத்தை என்றைக்கும் சுவை தருவதெனக் கருதி மயங்கிக் கிடந்தான் என்பது. செங்கிடை என்பது சிவந்த நிறம் உடைய ஒருவகை நெட்டி. தேன் - உவமையாகுபெயர் - தித்தியா நின்ற தேன் என இயைக்கவும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From women with lips red as the sola flower, sweet to taste,
- with bright pearl-like smiles, the honey that welled from their sharp teeth
- swelled his madness, his infatuation and the rest,
- so that he lay befuddled like an elephant in rut;
What the poem says
The 'honey' Cukkirīvaṉ drinks is the nectar of his women's kisses: their lips are red as the sola flower and their teeth like pearls.
It has inflamed his madness, his infatuation and the other dull passions, such as lust, pride, forgetfulness, sloth and sleep, until he lies stupefied like an elephant in musth. The poet is showing why he has forgotten his promise.