கம்பராமாயணம் 438 · பால 8.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அடுப்ப அரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர் - பிறர் அழியும்படி பழிச்செயல் செய்யும் தீத்தொழிலுடையோர் பகைவரல்லர்; கொடுப்பவர் முன்பு - கொடுப்பவருக்கு எதிரே நின்று கொண்டு; கொடேல் என நின்று தடுப்பவரே பகை - கொடுக்காதே என்று கூறித் தடுப்பவரே பகைவராவார்; அன்னார் தம்மையும் கெடுப்பவர் - அத்தகையோர் கொள்வாரையும் கொடுப்பாரையுமல்லாது தம்மையும் கெடுத்துக் கொள்பவரே ஆவர்; அன்னது ஓர் கேடு இலை என்றான் - (ஈவது விலக்கும்) அதனை ஒத்த கேடு வேறில்லை என்றான்.
அடுப்ப: கெட. பழி: பாவச் செயல். செய்ஞ்ஞர்: செய்வோர் கொடேல்: எதிர்மறை வியங்கோள். அன்னது: போன்றது. அன்னர்: அத்தகையோர். இலை: இல்லை என்பதன் இடைக்குறை. பழிபாவங்களைச் செய்வோர் பகைவரல்லர் கொடுப்பதைத் தடுப்பவரே பகைவராவார் கொள்வோரையும், கொடுப்போரையும் அல்லாது தடுப்போர் தம்மையே கெடுத்துக் கொள்வோராவார் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not even those who commit sins that bring ruin are the enemy;
- those who stand before a giver and say, Do not give,
- and stop him, they are the enemy; such people ruin
- even themselves; there is no harm like that, he said.
What the poem says
The worst enemy, Māvali says, is not the evildoer who brings harm on others but the person who stands in front of a giver and tells him not to give.
Such a person hurts the giver, the one who would have received, and in the end himself. No harm is greater than blocking an act of charity, a pointed answer to Śukra.