கம்பராமாயணம் 4382 · கிட்கிந்தா 10.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எந்தை கேள் - என் தந்தையே! நான் சொல்வதைக் கேட்பாயாக! அவ் இராமற்கு இளையவன் - அந்த இராமனுக்குத் தம்பியான இலக்குவன்; சிந்தையுள் நெடுஞ்சீற்றம் - மனத்திற் படிந்துள்ள பெருங் கோபத்தை, திருமுகம் தந்து அளிப்ப - முகமானது எடுத்துக் காட்ட; தடுப்ப அரும் வேகத்தன் - (யாராலும்) தடுக்க முடியாத வேகத்தோடு; வந்தனன் - வந்து சேர்ந்துள்ளான்; உன் மனக் கருத்து யாது - உனது உள்ளக் கருத்து என்ன; என்றான் - என்று (சுக்கிரீவனிடம் அங்கதன்) கேட்டான்.
எந்தை - மரூஉ.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Father, listen: that younger brother of Irāmaṉ,
- the great rage in his heart shown plainly on his face,
- with a speed that none can check,
- has come; what do you intend?' he said.
What the poem says
Aṅkataṉ warns his uncle that Ilakkuvaṉ has arrived, unstoppable and with anger written on his face, and asks what Cukkirīvaṉ means to do. Aṅkataṉ calls him 'father', the respectful form of address for a father's brother.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'entai! kēḷ: av irāmaṟku iḷaiyavaṉ
cintaiyuḷ neṭuñ cīṟṟam tiru mukam
tantu aḷippa taṭuppa arum vēkattaṉ
vantaṉaṉ; uṉ maṉak karuttu yātu?' eṉṟāṉ.