கம்பராமாயணம் 4383 · கிட்கிந்தா 10.25

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடுஞ் செல்வம் நெருக்கவும் - அரசாட்சி என்னும் பெரிய செல்வம் மமதையைத் தந்தாலும்; நறு நனை துளி நஞ்சு மயக்கவும் - மணமுள்ள கள்ளின் துளியாகிய நஞ்சு, மயக்கத்தை அளித்ததாலும்; தனை உணர்ந்திலன் - தன்னை உணராமையால் (அச்சுக்கிரீவன் மெய்ம் மறந்து); இனைய மாற்றம் இசைத்தனன் - அங்கதன் சொன்ன வார்த்தைகள் இன்னவையென்று; என்பது ஓர் நினைவு இலான் - புரிந்து கொள்ள இயலாத மன நிலையில்; மெல் அணைத் தங்கினான் - மென்மையான படுக்கையில் (முன் போலவே) கிடந்தான்.

தன்னையுண்டவரை அறிவில்லாதவராக ஆக்குவதால் கள்ளை 'நஞ்சு' என்றார். 'எஞ்ஞான்றும், நஞ்சுண்பார் கள்ளுண்பவர்' (குறள்: 926). நெடுமை: பெருமை. நனை நறுந்துளி நஞ்சு - உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With no notion at all that such words had been spoken to him,
  2. as his vast wealth weighed on him
  3. and the poison of the fragrant toddy-drops clouded him,
  4. not knowing himself, he lay on in his soft bed.

What the poem says

Aṅkataṉ's warning has no effect. Drunk on royal pride and on toddy, Cukkirīvaṉ does not even take in what has been said and goes on lying in bed.

Toddy is called poison because it robs the drinker of his senses. The commentary cites the Tirukkuṟaḷ: those who drink toddy are always drinking poison.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉaiya māṟṟam icaittaṉaṉ eṉpatu ōr
niṉaivu ilāṉ neṭuñ celvam nerukkavum
naṉai naṟun tuḷi nañcu mayakkavum
taṉai uṇarntilaṉ mel aṇait taṅkiṉāṉ.