கம்பராமாயணம் 4384 · கிட்கிந்தா 10.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆதலால் - அரசாட்சிச் செருக்காலும், கள்ளின் மயக்கத்தாலும் தன்னை மறந்து சுக்கிரீவன் படுக்கையை விட்டு எழாமல் கிடக்கவே; போதகமே அனான் - யானைக் கன்று போன்றவனும்; அவ் அரசு இளங்கோளரி - இளமையான வலிய ஆண் சிங்கம் போன்றவனுமான அவ் அங்கதன்; முன் நின்று இயற்றுவது - சுக்கிரீவன் முன்னே நின்று செய்யத்தக்கது; யாதும் இன்மையால் - எதுவும் இல்லாததால்; கோது இல் சிந்தை அனுமனை - குற்றமற்ற மனத்தையுடைய அனுமனை; கூவுவான் போதல் மேயினான் - அழைப்பதற்காக (அவனிடம்) செல்லலானான்.
வலிமை, துணிவு, முன்னும் பின்னும் நோக்குதல் இவற்றால் சிங்கமும், நடை, வலிமை, பெருமிதம் ஆகியவற்றால் யானையும் அங்கதனுக்கு உவமையாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- And so, since that young royal lion
- could do nothing more by standing before him,
- to call Aṉumaṉ of flawless mind
- he set out, he who was like a young elephant.
What the poem says
Seeing that nothing will rouse Cukkirīvaṉ, Aṅkataṉ goes to fetch Aṉumaṉ, whose mind is free of fault and whose judgement can be trusted.
Aṅkataṉ is compared to a young lion for strength, courage and watchfulness, and to a young elephant for his stately gait and pride.