கம்பராமாயணம் 4386 · கிட்கிந்தா 10.28

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எய்தி - (அங்கதன் தாரையை அடைந்து); மேல் செயத் தக்கது என் - இனி நாம் செய்யத்தக்க செயல் என்ன; என்றலும் - என்று அவளை வினாவிய அளவில், செய்தற்கு அரு - (அவள் அவ்வானரர்களை நோக்க) செய்யத் தகாத; நெடுந்தீயன - பெரிய தீச் செயல்களை; நொய்தில் செய்திர் - எளிதிலே செய்துவிட்டீர்கள்; அன்னவை நீக்கவும் - அச் செயல்களால் வரும் கேடுகளை எளிதில் நீக்கிக் கொள்ளவும்; நோக்குதிர் - வழி தேடுகிறீர்கள்; உதவி கொன்றீர் - செய்ந்நன்றி மறந்தவர்களான நீங்கள்; உய்திர் போலும் - தப்பி வாழ்வீர்கள் போலும்! எனா - என்று சொல்லி...

விளம்புகின்றாள் என அடுத்த கவியோடு முடியும். 'உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' (குறள் 110), உய்ய மாட்டீர் என்பது வலியுறுத்தப்பட்டது. நெடுந்தீயன - மிக்க கொடியன. நோக்குதல் - வழிதேடுதல், ஆலோசித்தல், 'செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென்றறம் பாடிற்றே' என்ற பழம் பாடல் கருத்தினை நினைவு கூர்க. (புறம் 34)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Arriving, he asked, 'What should we do next?', and she said,
  2. 'You have done great evils that should never be done,
  3. and lightly you look to be rid of them too;
  4. do you think you will survive, you who have killed a kindness?' and then...

What the poem says

Aṅkataṉ asks his mother Tārai what they should do now. Her answer is sharp. The monkeys have committed a great wrong and now expect to escape its consequences just as easily.

Her final question echoes the Tirukkuṟaḷ and a Puṟanāṉūṟu poem: there is no escape for one who 'kills' a kindness received, that is, for an ingrate. Her speech goes on in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eyti 'mēl ceyattakkatu eṉ?' eṉṟalum
'ceytir ceytaṟku aru neṭun tīyaṉa;
noytil aṉṉavai nīkkavum nōkkutir;
uytir pōlum utavi koṉṟīr?' eṉā.