கம்பராமாயணம் 4387 · கிட்கிந்தா 10.29

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மீட்டும் ஒன்று விளம்புகின்றாள் : "படை
கூட்டும்'என்று உமைக் கொற்றவன் கூறிய
நாள் திறம்பின் நும்நாள் திறம்பும் " எனக்
கேட்டிலீர்; இனிக் காண்டிர்; கிடைத்திரால்.

பொருள் · Meaning in Tamil

மீட்டும் ஒன்று - மேலும் (தாரை) ஒரு வார்த்தை, விளம்புகின்றாள் - சொல்லுகின்றாள்; படை கூட்டும் என்று - சேனைகளைச் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்று; உமைக் கொற்றவன் கூறிய - உங்களைப் பார்த்து வெற்றி வீரனான இராமன் குறிப்பிட்ட; நாள் திறம்பின் - தவணை நாள் தவறிவிட்டால்; உம் நாள் திறம்பும் - உங்களுடைய வாழ்நாள் அழிந்து போகும்; எனக் கேட்டிலீர் - என்று (நான் பலமுறை) சொல்லியும் (அதற்கு ஏற்றவாறு) நடக்காமல் போய்விட்டீர்கள்; இனிக் காண்டிர் - இனிமேல் (அதன் விளைவை) அனுபவத்தால் தெரிந்து கொள்வீர்கள்; கிடைத்திர் - (இப்பொழுது குற்றத்திலே) அகப்பட்டுக் கொண்டீர்கள்.

நாள் - வாழ்நாள். இப்பாடலால் தாரை முன்பே பலமுறை எச்சரித்திருக்கிறாள் என்பது புலப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She said one thing more: '"If the day the victor named
  2. for you to gather the army
  3. is broken, your days will be broken": you would not
  4. listen; now you will see; you are caught.'

What the poem says

Tārai reminds them that she had warned them more than once. If they failed to keep the day Irāmaṉ set for gathering the army, their own days, their lives, would be cut short.

The pun on 'day' (nāḷ, meaning both a fixed date and a lifespan) makes the warning sharper. They did not listen, and now they have been caught.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṭṭum oṉṟu viḷampukiṉṟāḷ: "paṭai
kūṭṭum' eṉṟu umaik koṟṟavaṉ kūṟiya
nāḷ tiṟampiṉ um nāḷ tiṟampum" eṉak
kēṭṭilīr; iṉik kāṇṭir; kiṭaittirāl.