கம்பராமாயணம் 4388 · கிட்கிந்தா 10.30

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வாலியார் உயிர் காலனும் வாங்க வில்
கோலி வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால் உம்புறத்து இருப்பார்? இது
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம்.

பொருள் · Meaning in Tamil

வாலி ஆர் உயிர் - வாலியின் அரிய உயிரை; காலனும் வாங்க - யமனும் கவர்ந்து செல்லுமாறு; விற்கோலி - வில்லை வளைத்து (அம்பு தொடுத்து); வாலிய செல்வம் - புகழ் மிக்க அரசாட்சிச் செல்வத்தை; கொடுத்தவர் - (உங்களுக்குத்) தந்தவர்களாகிய இராமனும் இலக்குவனும்; உம் புறத்து இருப்பார் போலும் - கிட்கிந்தைக்கு வெளியே சும்மா இருப்பார்கள்; இது உங்கள் தன்மையினோர்க்கு எலாம் சாலும் - (பேருதவி செய்தவர்களை) இப்படிப் புறக்கணிப்பது உங்களைப் போன்றவர்களுக்குப் பொருந்தியது தான்.

'பேருதவி செய்தவரும், பேராற்றலுடையவருமானவரை எவ்வளவு மேலாகப் போற்ற வேண்டும்? அதைவிட்டு அவரிடத்திலும் தவறாக நடந்தால் பொறுத்துக் கொண்டிருப்பார்களா?' என்றாள் தாரை. "நீங்கள் தவறு செய்தமையால் அவர்கள் சினம் பொங்கப் பெற்று நீங்கள் அழியுமாறு மோதப் போகிறார்கள்; இந்தத் தண்டனை உங்களுக்குப் பொருத்தமானதே" என்பதாம். போலும் - ஒப்பில் போலி. வாலிய செல்வம் - வாலியினுடைய செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம்.

வாலியார் - இதனை உயர்வுப் பன்மையாகவும் கொள்ள இடமுண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those who bent the bow so that even Death could seize
  2. Vālī's precious life, and gave you this splendid wealth,
  3. will they, do you think, just sit outside your walls? This
  4. is just what all those of your kind deserve.'

What the poem says

Tārai, who was Vālī's wife, speaks bitterly. Irāmaṉ bent his bow and let Death take Vālī, then handed the kingdom to Cukkirīvaṉ. Do the monkeys really think such benefactors will wait patiently outside the city while they are ignored?

The punishment coming to them is what people like them deserve. Vāliya celvam can also be read as 'Vālī's wealth', the kingdom that once belonged to her husband.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāli ār uyir kālaṉum vāṅka viṟ
kōli vāliya celvam koṭuttavar
pōlumāl um puṟattu iruppār? itu
cālumāl uṅkaḷ taṉmaiyiṉōrkku elām.