கம்பராமாயணம் 4395 · கிட்கிந்தா 10.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நோன் கதவும் - வலிய அக் கதவும்; முது வாயிலும் - பழமையான அந்த நகரவாயிலும்; கல் செய்த மதிலும் - கற்களால் எழுப்பப்பட்ட மதிலும்; நொய்தின் அடி அற்று - எளிதிலே கட்டுக் குலைந்து; திசை ஐஇரண்டு யோசனையின் அளவு - எல்லாத் திசைகளிலும் பத்து யோசனை தூரம்; உக குரங்கும் - சிதறியதால் (போர் செய்ய நின்ற) வானரங்களும்; வெருக் கொளா - அச்சங் கொண்டு; வெய்தின் நின்ற - (மனங்) கொதித்துத் தவித்தன.
வெய்தின் நிற்றல்: கொடிய துன்பம் அடைதல். யோசனை - ஓர் எல்லையளவு. 3, 71/2, கல் தொலைவு என்பர். வெருங் கொளா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். நோன்மை: வலிமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The strong gate, the ancient entrance,
- and the wall built of stone, easily torn from their footings,
- scattered for ten leagues in every direction,
- and the monkeys who stood there, seized with fear, were in torment.
What the poem says
With one push of Ilakkuvaṉ's foot, the massive gate, the old gateway and the stone rampart are torn from their foundations and their pieces fly ten yojanas, many miles, in every direction. The monkeys who had gathered to fight stand frozen in terror. The exaggeration shows the scale of Ilakkuvaṉ's anger and strength.