கம்பராமாயணம் 4396 · கிட்கிந்தா 10.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இவ்வாறு) பரிய மா மதிலும் - பருத்து உயர்ந்த அம் மதிலும்; படல் வாயிலும் - அகன்று நின்ற நகர வாயிலும்; சரிய வீழ்ந்த - சாய்ந்து விழுந்ததால் உண்டாகிய; தடித்தின் முடித்தலை நெரிய - இடியால் (தங்கள்) தலையிடம் நொறுங்கவே; நெஞ்சு பிளப்ப - (அம் மதிலைச் சார்ந்து நின்ற வானரங்கள் நெஞ்சு உறுதியழிந்து கலங்கி; நெடுந்திசை - திசைகள் தோறும்; இரியல் உற்றன - நெடுந்தூரம் ஓடின; இன்னுயிர் இற்றில - (அதனால்) இனிய உயிர் அழியாதனவாயின. (தப்பிப் பிழைத்தன)
மதில்: ஏணி கொண்டும் ஏறமுடியாத உயர்வும், புறத்தே உள்ளவர்க்குத் தோண்டமுடியாதவாறு அடி அகலமும், உள்ளே இருந்து தொழில் செய்வோர்க்குத் தலையகலமும் கொண்டிருக்கவேண்டும். இவ்வியல்புகளை உணர்த்தவே 'பரிய மா மதில்' என்றார். முடித்தலை: மதில்களின் சிகரம். 'உயர்வு அகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்' - (குறள் 743).
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the massive great wall and the broad gateway
- slid and fell, with a thunder-crash that shattered their crowning tops,
- their hearts split with fear and to the far quarters
- they fled; their dear lives were not lost.
What the poem says
The great rampart and the wide gate collapse with a sound like thunder. The monkeys who had been standing against the wall lose their nerve and scatter far and wide. They escape with their lives, but only by running.
The commentary notes that a proper fortress wall must be high, broad at the base, thick and hard to take, quoting the Tirukkuṟaḷ. That is what makes Ilakkuvaṉ's feat so striking.