கம்பராமாயணம் 440 · பால 8.33

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எடுத்து, ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன் ஏ,
தடுப்பது, நினக்கு அழகிது? ஓ தகவு இல் வெள்ளி!
கொடுப்பது விலக்கு கொடியோர் தமது சுற்றம்,
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி ஒழியும் காண்.'

பொருள் · Meaning in Tamil

தகவு இல்வெள்ளி - பெருந்தன்மை இல்லாத சுக்கிரனே; ஒருவருக்கு ஒருவர் எடுத்து ஈவதனின் முன்னம் - நாடி வந்திருக்கும் ஒருவருக்கு உடையவர் ஒருவர் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு; தடுப்பது நினக்கு அழகிதோ - கொடுக்க வேண்டாமெனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ?; கொடுப்பது விலக்கு கொடியோய் - ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே; உனது சுற்றம் - உன்னைச் சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது; உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி - உடுக்கத் துணியும், உண்ண உணவும் இல்லாமல்; விடுகின்றாய் - விடுகின்றாய் என்பதை அறிவாயாக.

“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் - உண்பதூஉம் இன்றிக் கெடும்” என்ற குறளை நினைந்து பாடிய செய்யுள் இது. ஈவது: கொடுப்பது 'அழகிதோ' இதில் ஓகாரம் எதிர்மறை வினாப் பொருள் தந்து நின்றது. தகவு: தகைமை. சுற்றம்: இனத்தார். கொடுப்பதைத் தடுத்த வெள்ளியைத் தகவில் வெள்ளி என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before one person can take something up and give it to another,
  2. to stop it: is that becoming in you, Veḷḷi, who lack all worth?
  3. You cruel one who forbid giving, you are leaving your own kin
  4. without clothes to wear or food to eat.

What the poem says

Māvali turns on Śukra directly. Is it seemly to block a gift before it is even handed over? A person who forbids giving, he warns, brings his own family to the point of having nothing to wear and nothing to eat.

The verse is built on a Tirukkuṟaḷ couplet saying that the kin of one who begrudges another's giving will perish without food or clothing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṭuttu, oruvarkku oruvar īvataṉiṉ muṉṉam,
taṭuppatu, niṉakku aḻakitō takavu il veḷḷi!
koṭuppatu vilakku koṭiyōy uṉatu cuṟṟam,
uṭuppatuvum uṇpatuvum iṉṟiviṭukiṉṟāy.'