கம்பராமாயணம் 441 · பால 8.34

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இம்மொழி யெலாம் முடிய மொழிந்து - இத்தகைய நீதிகளை எல்லாம் முற்றும் எடுத்துச் சொல்லி; மந்திரி கொடியன் என்று உரைத்த சொல் - அமைச்சனும், புரோகிதனுமான சுக்கிரன் வாமனனைக் கொடியன் என்று கூறிய சொற்களை; ஒன்றும் கொண்டிலன் - ஒரு சிறிதும் ஏற்றுக் கொள்ளாதவனாகி; நீ அடி ஒரு மூன்றும் - (வாமனனைப் பார்த்து) நீ என்னைக் கேட்ட அந்த மூன்றடி அளவுள்ள நிலத்தை; அளந்து கொள்க என - உனது காலால் அளந்து கொள்க என்று சொல்ல; நெடியவன் குறிய கை - திருமால் தனது குறுங்கைகளை; நீரில் நீட்டினான் - மாபலி வார்த்த தான நீரில் நீட்டினான்.

முடிய: முடிவு பெற. 'மொழி' என்பது சொல்வாகு பெயராய் நீதிமொழிகளை உணர்த்தி நின்றது. சுக்கிரன் ஆசிரியனும் அமைச்சனுமாம். “ஒன்றும்” இங்குச் சிறிதும் என்று பொருள் தந்து நின்றது. 'ஒரு' சிறுமை குறித்த சொல்லாகும். நெடியவன்: திருமால். இங்குக் குறளுருவான வாமன வடிவத்திலேயே - பின் எடுக்கப் போகும் பேருருவம் அடங்கியிருக்கிறது என்பதை உணர்த்த “நெடியவன் குறியகை” என்றார் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having said all these words to the end, and taking no notice at all
  2. of what his minister said, that this one was cruel,
  3. he said, Measure out the three paces for yourself;
  4. and the Tall One held out his short hand into the water.

What the poem says

Having said all this, Māvali brushes aside his minister-preceptor's warning and tells the dwarf to measure out his three paces. As the king pours the water that seals a gift, Viṣṇu holds out his small hand to receive it.

The poet calls him "the Tall One" with "short hands," a deliberate paradox, since the immense form is about to emerge from the tiny one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṭiya im moḻi elām moḻintu, mantiri
koṭiyaṉ, eṉṟu uraitta col oṉṟum koṇṭilaṉ
'aṭi oru mūṉṟum nī aḷantu koḷka' eṉa,
neṭiyavaṉ kuṟiya kai nīril nīṭṭiṉāṉ.