கம்பராமாயணம் 442 · பால 8.35

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கயம் தரும் நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து, எதிர்
வியந்தவர், வெருக் கொள, விசும்பின் ஓங்கினான்;
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப ஏ.

பொருள் · Meaning in Tamil

கயம் தரு நறும் புனல் - குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர்; கையில் தீண்டலும் - தனது கைகளில் தீண்டப்பட்டவுடனே; பயந்தவர்களும் இகழ் குறளன் - பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமன மூர்த்தி; எதிர்பார்த்து வியந்தவர் - எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; வெருக்கொள - அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப - அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல; விசும்பின் ஓங்கினான் - வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.

கயம்: குளம். நறும்புனல்: தெளிந்து குளிர்ந்துள்ள நீராம். உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்ற குறட்கருத்துத் தோன்ற, உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல, வாமன மூர்த்தி வானுற ஓங்கி வளர்ந்து நின்றான் என்பது கருத்து. பயந்தவர்: பெற்றோர் (தாய், தந்தையர்). வியத்தல்: ஆச்சரியபடுதல் வெருக்கொள: அச்சமுற.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as the fragrant water drawn from the pool touched his hand,
  2. the dwarf, whom even his own parents might mock, so that those who had watched
  3. him in wonder were struck with fear, soared up into the sky,
  4. just as help given to the great grows great.

What the poem says

The instant the gift-water touches his palm, the dwarf, so small that even his parents might laugh at him, grows until he fills the sky, terrifying the onlookers who had been gazing at him in wonder.

The simile draws on a Tirukkuṟaḷ couplet: the worth of a kindness is measured not by its size but by the greatness of the one who receives it. A gift to the great grows immeasurably, and so does the Lord.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kayam taru naṟum puṉal kaiyil tīṇṭalum,
payantavarkaḷum ikaḻ kuṟaḷaṉ, pārttu, etir
viyantavar, veruk koḷa, vicumpiṉ ōṅkiṉāṉ;
uyarntavarkku utaviya utavi oppavē.