கம்பராமாயணம் 4436 · கிட்கிந்தா 10.78

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வல்ல மந்திரியரோடு வாலி காதலனும், மைந்தன்
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்;
வில்லியும் அவனை நோக்கி,'விரைவின் என் வரவு வீர!
சொல்லுதி நுந்தைக்கு'என்றான்;'நன்று'எனத் தொழுது போனான்.

பொருள் · Meaning in Tamil

வாலி காதலனும் - வாலியின் மகனான அங்கதனும்; வல்ல மந்திரியரோடும் - நீதிமுறைகளிலும் அரசியல் நூல்களிலும் தேர்ச்சி பெற்ற அமைச்சர்களுடன் (வந்து); மைந்தன் அல்லி அம் கமலம் அன்ன - வீரனான இலக்குவனுடைய அகவிதழ் கொண்ட அழகிய செந்தாமரை மலர்போன்ற; அடி பணிந்து - திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, அச்சம் தீர்ந்தான் - (இலக்குவனால் என்ன நேரிடுமோ என்று எண்ணிய) பயம் நீங்கப் பெற்றான்; வில்லியும் அவனை நோக்கி - வில்வீரனான இலக்குவனும் அந்த அங்கதனைப் பார்த்து; வீர என் வரவு - 'வீரனே! எனது வருகையை நுந்தைக்கு விரைவின் சொல்லுதி - உன் சிற்றப்பனாகிய சுக்கிரீவனுக்கு விரைந்து சென்று கூறுவாய்; என்றான் - என்று மொழிந்தான் (அது கேட்டு); நன்று என - நல்லது என்று சொல்லி; தொழுது போனான் - (அவ் இலக்குவனை) வணங்கிப் போனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With his able ministers, Vālī's son too
  2. bowed at the young hero's feet, lovely as petalled lotuses, and his fear left him;
  3. the bowman looked at him and said, 'Hero, go quickly and tell
  4. your father that I have come'; 'Gladly,' he said, and bowing, went.

What the poem says

Aṅkataṉ comes with Cukkirīvaṉ's skilled ministers and bows at Ilakkuvaṉ's lotus feet. Seeing that the anger has passed, he is no longer afraid.

Ilakkuvaṉ asks him to hurry ahead and tell his 'father', his uncle Cukkirīvaṉ, that he has arrived. Aṅkataṉ agrees, bows and goes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1valla mantiriyarōṭum vāli kātalaṉum, maintaṉ
alli am kamalam aṉṉa aṭi paṇintu, accam tīrntāṉ;
villiyum avaṉai nōkki, 'viraiviṉ eṉ varavu vīra!
colluti nuntaikku' eṉṟāṉ; 'naṉṟu' eṉat toḻutu pōṉāṉ.