கம்பராமாயணம் 4438 · கிட்கிந்தா 10.80

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அறிவுற்று, மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கிப்
பிரிவுற்ற மயக்கத்தான், முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான்,
'செறி பொன் தார் அலங்கல் வீர! செய்திலம் குற்றம்; நம்மைக்
கறு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது?'என்றான்.

பொருள் · Meaning in Tamil

மகளிர் வெள்ளம் அறிவுற்று - (அங்கதன்) அங்கு வந்ததைப் பெண்டிர் கூட்டம் அறிந்து; அலமரும் அமலை நோக்கி - கலங்கி ஆர வாரம் இடுதலைக் கண்டு; பிறிவு உற்ற மயக்கத்தால்- தன் மயக்கத்தி லிருந்து விடுதலையடைந்து; முந்து உற்றது ஓர் பெற்றி - முன்பு (அங்கதன் வந்து எழுப்பியது போன்ற) நடந்த நிகழ்ச்சிகளின் தன்மையை; ஓரான் - உணராதவனாய் (அங்கதன் கூறியதற்கு விடையாக அவனை நோக்கி); செறி பொன் தார் அலங்கல் வீர - நிறைந்த பொன்மாலையும் மலர் மாலையும் அணிந்த வீரனே! குற்றம் செய்திலம் - 'நாம் எந்தக் குற்றமும் செய்யவில்லையே, (அவ்வாறு இருக்க); நம்மைக் கறுவுற்ற பொருளுக்கு - நம் மீது இலக்குவன் சினம் கொண்டதற்கு; காரணம் கண்டது என்னோ - காரணமாகக் காணப் பட்டது எது; என்றான் - என்று கேட்டான்.

அலமரல் - வருந்துதல் எனினும் அமையும் 'அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி'- (தொல் - சொல் - 3/4). அமலை - ஆரவாரம். கறுவுறல் - வெகுளல். வெள்ளம் - பேரெண்ணைக் குறிக்கும் (பெருநதிரஸ்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming to awareness, he saw the uproar of the flood of women in distress;
  2. freed from his stupor, but not grasping what had happened earlier,
  3. he said, 'Hero, garlanded with dense gold and flowers! We have done no wrong;
  4. what reason has been found for this wrath against us?'

What the poem says

Cukkirīvaṉ, the monkey king, has been lying drunk in his palace while the rainy season passed and his promise to help Irāmaṉ went unkept. Ilakkuvaṉ has stormed into Kiṭkintai in anger. Now Cukkirīvaṉ wakes from his stupor, sees the palace women milling about in alarm, and, unaware of all that has just happened, asks his nephew Aṅkataṉ why Ilakkuvaṉ should be angry with them, insisting they have done nothing wrong.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟivuṟṟu, makaḷir veḷḷam alamarum amalai nōkkip
piṟivu uṟṟa mayakkattāl, muntu uṟṟatu ōr peṟṟi ōrāṉ,
'ceṟi poṉ tār alaṅkal vīra! ceytilam kuṟṟam; nammaik
kaṟuvuṟṟa poruḷukku eṉṉō kāraṇam kaṇṭatu?' eṉṟāṉ.