கம்பராமாயணம் 4439 · கிட்கிந்தா 10.81

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எந்தை - (அப்போது அங்கதன் சுக்கிரீவனை நோக்கி) என் தந்தையே! இயைந்த நாள் எல்லை- (படையைத் திரட்டி வருவதாக முன்பு) ஏற்றுக் கொண்ட காலத் தவணையில்; நீ சென்று எய்தலை - (படைகளோடு) இராமனிடம் நீ போய்ச் சேரவில்லை; செல்வம் எய்தி வியந்தனை - பெருஞ் செல்வத்தைப் பெற்றுச் செருக்குற்றாய்; உதவி கொன்றாய் - (அவர்கள் செய்த) பேருதவியை மறந்துவிட்டாய்; மெய் இலை - சிறிதும் உண்மையில்லாதவனாக ஆனாய்; என்னச் சீற்றம் வீங்கி உயர்ந்தது - என்பதால் (இலக்குவனுக்குக்) கோபம் மிகுதியும் மூண்டது; ஈது உற்றது செய்கை - இதுதான் நடந்தசெயல்; நயம் தெரி அனுமன் - பக்குவம் அறிந்த அனுமன்; வேண்ட - வேண்டிக் கொண்டதால்; நம்மை இன்னும் நல்கினன் - (அந்த இலக்குவன் நம்மை இன்னும் உயிரோடு இருக்குமாறு அருள்புரிந்துள்ளான்.

அனுமன் இலக்குவனை வேண்டியிராவிடில் அப்போதே நாம் அனைவரும் இலக்குவனால் கொல்லப்பட்டிருப்போம் என்றவாறு. முற்றும் நயம்தெரி அனுமன் - முன்பு தாரையைக் கொண்டு இலக்குவனது சினத்தைத் தணித்துப் பின்னர் இனிய சொற்களால் வேண்டிக் கொண்டதைக் குறித்தது. நயம் - பக்குவம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '"On the agreed day, my father, you did not go and arrive; having gained wealth,
  2. you grew proud; you killed the help done to you; you have no truth" — so, swelling,
  3. his wrath rose high; and this is what has happened; because Aṉumaṉ,
  4. who knows every fitting course, pleaded, he has granted us life still.'

What the poem says

Aṅkataṉ answers his uncle Cukkirīvaṉ, whom he calls "my father". He sums up Ilakkuvaṉ's charge: the king failed to come with his army by the agreed time, grew arrogant with his new wealth and kingdom, forgot the great help Irāmaṉ gave him in killing Vālī, and proved false to his word.

Only Aṉumaṉ's tactful intercession, Aṅkataṉ says, has kept them all alive. "Killing" a kindness is the Tamil idiom for ingratitude, the gravest of faults.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"iyainta nāḷ entai nī ceṉṟu eytalai; celvam eyti
viyantaṉai; utavi koṉṟāy; mey ilai" eṉṉa vīṅki
uyarntatu cīṟṟam; maṟṟu ītu uṟṟatu ceykai; muṟṟum
nayam teri aṉumaṉ vēṇṭa, nalkiṉaṉ, nammai iṉṉum.