கம்பராமாயணம் 4440 · கிட்கிந்தா 10.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வானர வீரர் - வானர வீரர்கள்; வருகின்ற வேகம் நோக்கி - இலக்குவன் வரும் வேகத்தைப் பார்த்து; வானைப் பொருகின்ற - வானத்தைச் சென்று தொடுகின்ற; நகர வாயில் - (டெ்நெதற நகரத்தின் வாயிலில் உள்ள; பொன் கதவு அடைத்து - பொன்னாலாகிய கதவுகளைச் சாத்திக் கொண்டு; அருகு ஒன்றும் இல்லா வண்ணம் - பக்கத்தில் ஒரு சிறு குன்றுகூட இல்லாதபடி; கற்குன்று வாங்கினர் அடுக்கி - கல் மலைகளையெல்லாம் எடுத்துவந்து (அவ் வாயிலில்) ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி, மற்றும் - மேலும்; தெரிகின்ற சினத்தீப் பொங்க - வெளிப்படுகின்ற கோபத் தீயானது கொதித்தெழு; செருச் செய்வான் - (இலக்குவனோடு) போர் செய்யும் பொருட்டு; செருக்கி நின்றார் - செருக்குக் கொண்டு நின்றார்கள்.
வானர வீரர்கள் நகரவாயிலின் பொற் கதவுகளைத் தாளிட்டு அவற்றின் அருகில் பல் சிறு குன்றுகளை அடுக்கிவைத்த செய்தி முன் கூறப்பட்டது. (430/) அதனை அங்கதன் சுக்கிரீவனுக்குத் தெரிவிக்கிறான். வானைப் பொருகின்ற நகர வாயில் - உயர்வுநவிற்சியணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Seeing the speed with which he came, the monkey warriors
- shut the golden doors of the city gate that strives with the sky, and stone hills
- they carried and stacked, so that not one was left nearby; and then,
- with their visible fire of rage boiling up, they stood proud, ready to fight.'
What the poem says
Aṅkataṉ continues his report to Cukkirīvaṉ. When the monkeys saw Ilakkuvaṉ striding towards the city in fury, they barred the golden gates and piled up boulders and small hills against them until none were left in the neighbourhood, and stood defiantly ready for battle, not realising whom they were opposing.
The gateway "that strives with the sky" is a deliberate exaggeration praising its height.