கம்பராமாயணம் 4441 · கிட்கிந்தா 10.83

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால்
தீண்டினன்; தீண்டா முன்னம், தெற்கொடு வடக்கும் தேய
நீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும்,
கீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே.

பொருள் · Meaning in Tamil

ஆண்தகை - ஆடவருள் சிறந்தவனான இலக்குவன்; அதனை நோக்கி - வானரர்களின் அந்தச் செயலைப் பார்த்து; அம் கமல மலர்த் தாளால் தீண்டினன் - அழகிய செந்தாமரை மலர் போன்ற தனது காலால் (அடைத்த வாயில் கதவை) உதைத்தான்; தீண்டாமுன்னம் - (அத்திருவடி) படுவதற்கு முன்பே; தெற்கொடு வடக்குச் செல்ல - தென்வடலாகப் பரவி; நீண்ட கல் மதிலும் - நீண்டுள்ள கல்லால் ஆகிய மதில்களும்; கொற்ற வாயிலும் - வெற்றி பொருந்திய நகரவாயிலும்; நிரைத்த குன்றும் - வரிசையாக அடுக்கி வைத்த குன்றுகளும்; தகர்ந்து கீண்டன - உடைந்து சிதறினவாகி; பின்னை - பின்பு; பொடியொடும் கெழீஇய - பொடியுடன் கலந்து ஒன்றாயின.

அன்றே - ஈற்றசை; தீண்டாமுன்னம் தகர்ந்து கீண்டன - மிகையுயர்வு நவிற்சியணி. கீண்டன - கிழிந்தன, உடைந்தன, 'தகர்ந்து கீண்டன' என்பதைக் கீண்டு தகர்ந்தன எனப் பிரித்துக் கூட்டிப் பிளந்து உடைந்தன எனவும் பொருள் கொள்ளலாம். பிளப்பது முதலில் தகர்வது பின்னால்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That manly one, seeing it, touched it with his foot, lovely as a lotus flower;
  2. and before it was even touched, the long stone wall stretching
  3. from south to north, the victorious gateway and the hills ranged there
  4. split and shattered, and then were mingled with the dust.'

What the poem says

Aṅkataṉ describes how Ilakkuvaṉ dealt with the barricade. He merely touched the barred gate with his lotus-like foot, and even before his foot made contact, the long stone rampart, the gateway and the piled-up hills burst apart and crumbled into dust.

That the wall breaks before the foot even lands is a figure of extreme hyperbole, showing the irresistible power of Irāmaṉ's brother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āṇtakai, ataṉai nōkki, am malark kamalat tāḷāl
tīṇṭiṉaṉ; tīṇṭāmuṉṉam, teṟkoṭu vaṭakkuc cella
nīṇṭa kal matilum, koṟṟa vāyilum, niraitta kuṉṟum,
kīṇṭaṉa takarntu, piṉṉaip poṭiyoṭum keḻīiya aṉṟē.