கம்பராமாயணம் 4442 · கிட்கிந்தா 10.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அந் நிலை கண்ட - அவ்வாறு (இலக்குவனால் நேர்ந்த) நிலை மையைப் பார்த்த; திண்தோள் அரிக் குலத்து அனிகம் - வலிய தோள்களையுடைய வானர சேனை; எந் நிலை நின்றது என்கேன் - எந்த நிலைமையில் இருந்ததென்று சொல்வேன்? யாண்டுப் புக்கு - எந்த இடத்தில் புகுந்து; ஒளித்தது என்கேன் - பதுங்கியது என்று சொல்வேன்; இந் நிலை கண்ட அன்னை - (குரக்குச் சேனையின் இத்தகைய நிலைமையை நேரிலே பார்த்த (என்) தாயான தாரை; ஏந்து இழை ஆயத்தோடு - சிறந்த அணிகளை அணிந்த மகளிர் கூட்டத்துடனே; மின் நிலை வில்லினானை - மின்னல் போன்று ஒளிரும் வில்லைத் தாங்கிய இலக்குவனை; வழி எதிர் விலக்கி நின்றாள் - வழியிலே எதிரே சென்று வழி மறித்து நின்றாள்.
அம்மா- வியப்பிடைச்சொல். இலக்குவனது திருவடி பட்ட அளவில் வாயிற் கதவு முதலியன பொடியாய்விட்டதைக் கண்ட வானரங்கள் அஞ்சி, உயிர் தப்பிக் கலங்கிப் போனதிசை தெரியாமல் ஓடிப் போயின; அப்போது இலக்குவன் சினத்தோடு வர, அவனை மகளிர் கூட்டத்தோடு தாரை எதிர் கொண்டாள் என்பது. அனிகம் -சேனை; அனீகம் என்ற வடசொல்லின் திரிபு. மின் நிலைவில் - நிலைத்தல் என்றும் இல்லாத மின்னல் வில்லிடம் நிலைத்து நின்றது என்பது நயம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The strong-shouldered army of the monkey race that saw that state, ah!
- what state shall I say it was in? Where shall I say it ran in and hid?
- My mother, who saw this state, together with her troop of jewelled women,
- stood in the path facing him whose bow holds the lightning, and stopped him.'
What the poem says
Aṅkataṉ tells how the monkey army, seeing the gate turned to dust, scattered in terror; he cannot even say where they fled to hide. Then his mother Tārai, Vālī's widow, went out with a company of richly adorned women and stood in Ilakkuvaṉ's way.
The bow "in which lightning stays" is a conceit: lightning never stays anywhere, yet in Ilakkuvaṉ's gleaming bow it seems to remain fixed.