கம்பராமாயணம் 4453 · கிட்கிந்தா 10.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கள்ளினால் - கள்ளைக் குடிப்பதால்; வஞ்சமும் களவும் - வஞ்சனையும் திருட்டும்; பொய்யும் மயக்கமும் - பொய் பேசுதலும் அறியாமையும், மரபு இல் கொட்பும் - தொன்றுதொட்டு வந்த முறைக்கு மாறான கொள்கையும்; தஞ்சம் என்றாரை - அடைக்கலமாக அடைந்தவரை; நீக்கும் தன்மையும் - பாதுகாவாது நீக்கும் தீய பண்பும்; களிப்பும் - செருக்கும்; தாக்கும் - (சேர்ந்து வந்து) வருத்தும்; கஞ்ச மெல் அணங்கும் - செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மென்மை நிரம்பிய திருமகளும்; தீரும் - நீங்குவாள்; நஞ்சமும் - நஞ்சும்; அருந்தினாரைக் கொல்வது அல்லால் - உண்பவரைக் கொல்லுமேயல்லாமல்; நரகினை நல்காது - (அவர்களுக்கு) நரகத்தைக் கொடுக்காது.
தன்னை உண்டவரது உடம்பை மட்டும் நஞ்சு அழிக்கும்; கள்ளோ உடம்பையழித்தலோடு உயிரையும் நரகத்தில் சேர்க்கும் என்பது. உவமானமாகிய நஞ்சைவிட உவமேயமாகிய மதுவுக்கு வேற்றுமை தோன்றக் கூறியது: வேற்றுமையணி. கள்ளினால் - வேற்றுமை மயக்கம். 'துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் - (குறள்: 926) என்ற குறட் கருத்தை ஒப்பிட்டுணர்க. குடிவெறியால் கைப்பொருள் அனைத்தும் இழந்து வறியராவர் ஆதலின் கஞ்ச மெல்லணங்கும் தீரும் என்றார் திருக்குறளும் இக்கருத்தினைக் கூறும்: 'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு' (குறள் : 920)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Deceit and theft and lies and delusion and lawless conduct,
- the habit of casting off those who say "refuge", and arrogance, all assail one;
- and the soft lady of the lotus departs, through toddy; poison
- kills those who swallow it, but does it not stop short of granting hell?'
What the poem says
Cukkirīvaṉ ends this part of his lament by setting drink beside poison. Toddy brings deceit, theft, lies, confusion, conduct against tradition, abandoning those who have sought one's protection, and swaggering pride; and Tiru, the goddess of fortune who sits on the lotus, leaves the drinker, who loses all his wealth.
Poison merely kills the body, but drink destroys the body and sends the soul to hell as well. The commentary compares Tirukkuṟaḷ couplets that equate drinkers with those who take poison and link drink with loss of fortune.