கம்பராமாயணம் 4454 · கிட்கிந்தா 10.96

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கேட்டனன்,'நறவால் கேடு வரும்'என; கிடைத்த அச்சொல்
காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்,
மீட்டு இனி உரைப்பது என்னே? விரைவின் வந்து அடைந்த வீரன்
மூட்டிய வெகுளியால் நான் முடிவதற்கு ஐயம் உண்டோ?

பொருள் · Meaning in Tamil

நறவால் கேடு வரும் எனக் கேட்டனன் - கள்ளைக் குடிப்பதால் தீங்கு விளையும் என்று (பெரியோர் சொல்லக்கேட்டிருக்கிறேன்; கிடைத்த அச்சொல் காட்டியது - (அவ்வாறு) கூறப்படும் அந்தக் கூற்று நேர்முகமாகத் தன் வலிமையைக் காட்டிவிட்டது; மீட்டு இனி உரைப்பது என்னே - திரும்பவும் இனிமேல் சொல்ல வேண்டுவது என்ன இருக்கின்றது? அனுமன் நீதி கல்வியால் கடந்தது - அனுமனது நீதிநூல் அறிவால் மூளவிருந்த துன்பத்திலிருந்து நாம் நீங்கியது; அல்லால் - அல்லாமல்; விரைவின் வந்தடைந்த - விரைவாக வந்து சேர்ந்த; வீரன் மூட்டிய வெகுளியால் - வீரனாகிய இலக்குவனது மூட்டப்பட்ட சினத்தால்; நாம் முடிவதற்கு - நாம் இறந்தொழிவதற்கு; ஐயம் உண்டோ - ஐயம் உளதாகுமோ?

அனுமன் இடத்திற்கேற்பத் தனது நுட்ப உணர்வினால் இலக்குவனது சீற்றத்தைத் தணித்திரா விட்டால் நாம் இறுதி எய்திருப்போம் என்பதில் ஐயமில்லை என்றான் சுக்கிரீவன். 'காட்டியது': நேர்முகமாக வந்து காட்டியது அனுமனது கல்வியையும் நீதியையும் புகழ்ந்து அவனால் தான் தப்பியதை யுணர்ந்து சுக்கிரீவன் கூறியது இது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I had heard that ruin comes from toddy; that saying I came upon
  2. has now shown itself true; except that Aṉumaṉ, by his learning in right conduct, carried us across,
  3. what more is there to say again? Through the wrath kindled in the hero
  4. who came here so swiftly, was there any doubt that we would perish?'

What the poem says

Cukkirīvaṉ admits that the old warning that drink brings ruin has been proved true before his eyes. They escaped only because Aṉumaṉ, learned in the ways of right conduct, handled the situation wisely and calmed Ilakkuvaṉ. Otherwise, the king says, there is no doubt they would all have been destroyed by the furious hero's anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kēṭṭaṉaṉ, 'naṟavāl kēṭu varum' eṉa; kiṭaitta accol
kāṭṭiyatu; aṉumaṉ nītik kalviyāl kaṭantatu allāl,
mīṭṭu iṉi uraippatu eṉṉē? viraiviṉ vantu aṭainta vīraṉ
mūṭṭiya vekuḷiyāl yām muṭivataṟku aiyam uṇṭō?