கம்பராமாயணம் 4455 · கிட்கிந்தா 10.97

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய- ஐயனே (அங்கதனே); இந் நறவினின் அரிய கேடு - இந்த மதுவால் நேரும் பெரிய தீங்கிற்கு; நான் அஞ்சினேன் - நான் பயந்தேன்; கையினால் அன்றியேயும் - அந்த மதுவைக் கையினால் தீண்டுவதல்லாமல்; கருதுதலும் கருமம் அன்று - மனத்தால் நினைத்தலும் செய்யக்கூடிய செயலாகாது; வெய்யது ஆம் மதுவை - கொடியதான இந்தக் கள்ளை; இன்னம் விரும்பினேன் என்னின் - இனியும் நான் விரும்பினேனானால்; வீரன் செய்ய தாமரைகள் அன்ன சேவடி - வீரனான இராமனுடைய செந்தாமரை போன்று அடிகள்; சிதைக்க என்றான் - என்னை அழிப்பனவாக என்று ஆணையிட்டுக் கூறினான்.

இராமனின் திருவடியே சான்றாக மதுவை இனி ஒருக்காலும் விரும்பமாட்டேன் என்று சுக்கிரீவன் சூளுரை செய்தவாறு, மதுவை இடைவிடாது நினைத்தலும், இடையறாது காண்டலும் கவ்யம் பக்கு பருகுவதற்குத் தூண்டுகோல் ஆகுமாதலின் 'கருதுதல் கருமம் அன்று' என்றான். வெய்யதாம் மது: கடும் புளிப்பையுடைய மது; மேன்மேலும் விருப்பத்தை விளைவிக்கும் மது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Sir, I am afraid of the grievous ruin that lies in this toddy;
  2. not only with the hand: even to think of it is not a thing to do;
  3. if I ever again desire this fierce drink, may the hero's
  4. red feet, like lotus flowers, destroy me,' he said.

What the poem says

Cukkirīvaṉ swears a solemn oath before Aṅkataṉ. He now fears the ruin that drink brings; not only must he never touch it, he must not even think of it, since constant thoughts of liquor lead to drinking. If he ever craves it again, he says, may the lotus feet of the hero Irāmaṉ crush him. Swearing by Irāmaṉ's feet makes this the most binding vow he can make.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aiya! nāṉ añciṉēṉ, in naṟaviṉiṉ ariya kēṭu;
kaiyiṉāl aṉṟiyēyum karututal karumam aṉṟāl;
veyyatu ām matuvai iṉṉam virumpiṉēṉ eṉṉiṉ, vīraṉ
ceyya tāmaraikaḷ aṉṉa cēvaṭi citaikka' eṉṟāṉ.