கம்பராமாயணம் 4466 · கிட்கிந்தா 10.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கல் அணை மனத்தினை உடை - கல்லைப் போன்ற மனத்தையுடைய; கைகேசியால் - கைகேசி பெற்ற வரத்தின் விளைவாக; எல் அணை மணி முடி - ஒளி பொருந்திய மணி மகுடத்தை; துறந்த எம் பிரான் - விட்டு (கானகம்) வந்த எம் தலைவனான இராமன்; புல் அணை வைக - புல்லாலாகிய படுக்கையிலே தங்க, யான் - நான்; பொன்செய் பூத் தொடர்- பொன்னால் செய்யப்பட்டதும் பூக்களால் புனையப் பெற்றதுமான; மெல் அணை வைகவும் - மென்மையான ஆசனத்தில் தங்குதலும்; வேண்டுமோ - விரும்பத்தக்கது ஆகுமோ? என்றான் - என்று கூறினான்.
இலக்குவன் கைகேயி செய்த கொடுமையை மறவாமல் இருப்பதைக் 'கைகேசியால் எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்' என்னும் மொழிகள் குறிக்கின்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Because of Kaikēci, whose mind is like a stone,
- our lord gave up the radiant jewelled crown;
- while he lies on a bed of grass, must I lie
- on a soft seat made of gold and strung with flowers?' he said.
What the poem says
Ilakkuvaṉ speaks his refusal aloud. Because of Kaikēyi, here called Kaikēci, whose heart is hard as stone, his lord Irāmaṉ gave up the gleaming crown and now sleeps on grass in the forest. How then could he sit on a soft golden seat adorned with flowers? The words show that Ilakkuvaṉ has never forgotten or forgiven Kaikēyi's cruelty.