கம்பராமாயணம் 4467 · கிட்கிந்தா 10.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று அவன் உரைத்தலும் - என்று அந்த இலக்குவன் சொல்லிய அளவில்; இரவி காதலன் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; நின்றனன் - (திகைத்து) நின்றான்; மலர்க் கண் நீர் உக விம்மினன் - தாமரை மலர் போன்ற கண்களில் கண்ணீர் பெருக உள்ளம் பொருமினான் (அப்போது); மனுவின் கோமகன் - மனுவின் வழித் தோன்றிய அரசகுமாரனான இலக்குவன்; குன்று என உயர்ந்த - மலை போல ஓங்கிய; அக் கோயில் - அந்த அரண்மனையினுடைய, குட்டிம வன்தலத்து - கல் பரப்பப்பட்ட மேடையில்; இருந்தனன் - அமர்ந்தான்.
சுக்கிரீவன் கண்ணீர் உகுத்தது இலக்குவனுடைய சொற்களைக் கேட்டும் தான் அந்நிலையில் நில்லாதது கருதியே எனலாம்.
குட்டிமம் - வடசொல்: கல் பாவிய வலிய இடம் என்று பொருள்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had spoken thus, the beloved son of the Sun
- stood still and sobbed, tears falling from his flower-like eyes;
- and the princely son of Maṉu's line sat down on the hard
- stone-paved floor of that palace that rose high as a mountain.
What the poem says
Hearing Ilakkuvaṉ's words, Cukkirīvaṉ stands stunned and weeps, ashamed that he has been living in luxury while Irāmaṉ suffers, the very thing Ilakkuvaṉ refuses to do. Ilakkuvaṉ, prince of the solar line descended from Maṉu, sits instead on the bare stone floor of the towering palace.