கம்பராமாயணம் 4469 · கிட்கிந்தா 10.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரசு - சுக்கிரீவ மன்னன் (இலக்குவனைப் பார்த்து); விதி முறை மரபின் - 'நூல்களில் கூறிய முறைப்படியே; மஞ்சனம் ஆடியே - நீராடி; எஞ்சல் இல்- குறைதல் இல்லாத (சுவையான; இன் அமுது அருந்தின் - இனிய உணவை உண்டால்; யாம் எலாம் - நாங்கள் எல்லாரும், இனி உய்ஞ்சனம் - நல்வாழ்வு பெற்றவர்களாவோம்; என உரைத்தலும் - என்று சொல்லிய அளவில்; அஞ்சன வண்ணனுக்கு அனுசன் - மையையொத்த கரிய நிறத்தவனான இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன்; கூறுவான்- சொல்லலானான்.
'இலக்குவனே! நீ நீராடி யுணவுண்டால் நாங்கள் உய்வோமெனச் சுக்கிரீவன் முகமன் கூறினான் என்பது. மரபு- இடத்திற்கேற்பது 'அனுசன் - அனுஜன்: பின் பிறந்தவன் எனப் பொருள் தரும் வடசொல். உய்ஞ்சனம் - உய்ந்தனம்: போலி; கால வழுவமைதி. அமுது (உணவு - உவமையாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If you bathe according to the rules of the proper rites
- and eat a sweet meal lacking nothing, all of us
- will be saved from now on,' said the king; and at that,
- the younger brother of the one coloured like collyrium replied.
What the poem says
Cukkirīvaṉ, as a good host, begs Ilakkuvaṉ to take a ceremonial bath and eat a fine meal, saying that if he does so, all of them will feel redeemed. Ilakkuvaṉ, younger brother of the dark-hued Irāmaṉ, answers in the next verse. Saying "we will be saved" is a courteous formula of hospitality.