கம்பராமாயணம் 4475 · கிட்கிந்தா 10.117

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இரவி கான்முளை - சூரிய குமாரனான சுக்கிரீவன்; பொருக்கென எழுந்தனன் - விரைவாக எழுந்தான்; விழுந்த கண் நீரினன் - பெருகும் கண்ணீரையுடையவனும்; வெறுத்த வாழ்வினன் - செல்வ வாழ்க்கையை வெறுத்தவனும்; அழிந்து அயர் சிந்தையன் - வருந்தித் தளரும் மனமுடையவனுமாகி; வரன் முறை போதல் முன்னுவான் - இராமனிடம் முறைப்படி செல்ல எண்ணியவனாய்; ஆண்டு - அப்பொழுது; அனுமற்கு - அனுமனிடம்; ஒன்று மொழிந்தனன் - ஒரு சொல் சொன்னான்.

கான் முளை - ஒரு வம்சத்தில் தோன்றியவன். கால் - வமிசம். விழுந்த கண்ணீர், வெறுத்த வாழ்வு என்று எச்சங்களையடுக்கியதால் சுக்கிரீவன் விழிகளில் பிறரின் துயரம் கண்டு பொறாததால் தானாகப் பெருகிய கண்ணீரும், உண்மையாகவே வாழ்வில் ஏற்பட்ட வருத்தமும் கண்டு தெளியலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The offspring of the Sun rose up at once;
  2. with tears falling, sick of his way of life,
  3. his mind broken and faint, he spoke one word there to Aṉumaṉ,
  4. intending to go in proper order to Irāmaṉ.

What the poem says

Cukkirīvaṉ springs to his feet, weeping, disgusted with the life of luxury he has been leading, his heart crushed with remorse. Resolving to go at once and present himself to Irāmaṉ in due form, he first gives an instruction to Aṉumaṉ, set out in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntaṉaṉ porukkeṉa iravi kāṉmuḷai;
viḻunta kaṇṇīriṉaṉ veṟutta vāḻviṉaṉ
aḻintu ayar cintaiyaṉ aṉumaṟku āṇṭu oṉṟu
moḻintaṉaṉ varaṉmuṟai pōtal muṉṉuvāṉ.