கம்பராமாயணம் 4476 · கிட்கிந்தா 10.118

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'போயின தூதரின் புகுதும் சேனையை
நீ உடன் கொணருதி நெறிவலோய்!'எனா
ஏயினன் அனுமனை'இருத்தி ஈண்டு'எனா
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான்.

பொருள் · Meaning in Tamil

நெறி வலோய் - (சுக்கிரீவன் அனுமனைப் பார்த்து) நீதி நெறிகளில் வல்லவனே; போயின தூதரின் - (முன்பு கட்டளையிட்ட படி) சென்றுள்ள தூதர்களோடு; புகுதும் சேனையை - இனி வரும் வானர சேனையை; நீ உடன் கொணருதி - நீ உன்னோடு அழைத்து வருக; என - எனவும், ஈண்டு இருத்தி - (அதுவரை நீ இங்கேயே இருப்பாய்; எனா - எனவும் ; அனுமனை ஏயினன் - அனுமனுக்குக் கட்டளை யிட்டவனாய், நாயகன் இருந்துழி - தலைவனான இராமன் தங்கியிருந்த இடத்திற்கு, கடிது நண்ணினான் - விரைந்து போகலானான்.

தூதரின் - உருபு மயக்கம். இருந்த உழி என்பது இருந்துழி எனத் தொக்கு வந்தது. ஏயினன் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The army that will come in with the envoys who have gone,
  2. you bring along with you, master of right ways,' so
  3. he commanded Aṉumaṉ, and saying, 'Stay here,'
  4. he went swiftly to the place where the Lord was.

What the poem says

Cukkirīvaṉ orders Aṉumaṉ, wise in right conduct, to stay behind in Kiṭkintai and bring along the monkey armies when they arrive with the messengers already sent out to summon them. Then Cukkirīvaṉ himself hurries to the hill where Irāmaṉ is staying.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pōyiṉa tūtariṉ pukutum cēṉaiyai
nī uṭaṉ koṇaruti neṟi valōy!' eṉa
ēyiṉaṉ aṉumaṉai 'irutti īṇṭu' eṉā
nāyakaṉ iruntuḻik kaṭitu naṇṇiṉāṉ.