கம்பராமாயணம் 4477 · கிட்கிந்தா 10.119

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அங்கதன் உடன்செல அரிகள் முன்செல
மங்கையர் உள்ளமும் வழியும் பின்செல
சங்கை இல் இலக்குவன் தழுவி தம் முனின்
செங்கதிரோன் மகன் கடிதிற் சென்றனன்.

பொருள் · Meaning in Tamil

செங்கதிரோன் மகன் - சிவந்த ஒளிக்கற்றைகளையுடைய சூரியன் மகனான சுக்கிரீவன்; சங்கை இல் - எப் பொருளிலும் ஐயம் திரிபு இல்லாத (தூய மனமுடைய); இலக்குவன் தழுவி - இலக்குவனைத் தழுவிக் கொண்டு; அங்கதன் உடன்செல - அங்கதன் தன்னுடன் வரவும்; அரிகள் முன் செல - வானரங்கள் முன்னே செல்லவும்; மங்கையர் உள்ளமும் - (அன்புள்ள) வானர மகளிரின் மனமும் பின் தொடர்ந்து வரவும்; வழியும் பின் செல - கடந்தவழிகள் பின்னே தங்கி விடவும்; தம்முனின் - தமையனான இராமனிடம்; கடிது சென்றனன் - விரைந்து சென்றான்.

சுக்கிரீவனுடைய காதலுக்கு உரியர் ஆகலின் மகளிர் மனம் அவன் பின் சென்றது என்றார். பின்செல்: இரட்டுற மொழிதல் பின் தங்க பின்தொடர என்னும் இருபொருள் தருதலால். தம்முன்: இராமனால் தம்பியாகக் கருதப்பட்டவனாகலின் தம்முன் என்றார். அரசனுக்கு முன்பு வீரர்கள் செல்வது மரபாதலின் 'அரிகள் முன்செல' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With Aṅkataṉ going along with him, the monkeys going ahead,
  2. the hearts of the women and the road falling behind,
  3. embracing the guileless Ilakkuvaṉ, to his elder brother
  4. the son of the red-rayed Sun went swiftly.

What the poem says

Cukkirīvaṉ sets out with Ilakkuvaṉ at his side, his arm about him, Aṅkataṉ with him and monkey warriors marching in front, as was customary for a king. The hearts of his loving wives follow him, while the road falls behind. The poet puns on "fall behind": the women's hearts follow after him and the road is left behind.

Irāmaṉ is called Cukkirīvaṉ's "elder brother" because he had accepted the monkey king as a younger brother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkataṉ uṭaṉ cela arikaḷ muṉ cela
maṅkaiyar uḷḷamum vaḻiyum piṉ cela
caṅkai il ilakkuvaṉ taḻuvi tammuṉṉiṉ
ceṅ katirōṉ makaṉ kaṭitu ceṉṟaṉaṉ.