கம்பராமாயணம் 4478 · கிட்கிந்தா 10.120

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒன்பதினாயிர கோடி ஊகம் தன்
முன் செல பின் செல ஞாங்கர் மொய்ப்பு உற
மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்று உற
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில்.

பொருள் · Meaning in Tamil

ஒன்பதினாயிர கோடி யூகம் - ஒன்பதினாயிரங் கோடிக் குரக்குச் சேனைகள்; தன் முன்செல பின்செல மருங்கு மொய்ப்புற - தனக்கு முன்னும் பின்னும் இருபக்கமும் நெருங்கி வரவும்; மன் பெருங் கிளைஞரும் - மிகச் சிறந்த உறவினர்களாகிய வானரங்களும்; மருங்கு சுற்றுற - அருகில் சூழ்ந்து வரவும்; மின் பொரு பூணினான் - மின்னல் போன்ற ஒளி விடுகின்ற அணிகளை அணிந்த சுக்கிரீவன்; செல்லும் வேலையில் - (இராமன் இருக்கும் இடத்திற்குப்) போகும் சமயத்தில். . .

பின்செல மருங்கு மொய்ப்புற என்ற சொற்போக்கினால் சுக்கிரீவனுடன் சென்ற பெரும் பரிவாரத்தின் இயல்பு புலனாகும். மருங்கு - பக்கம், மேல் யூகம் - குரக்குப் படை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With nine thousand crores of monkey troops
  2. going before him, going behind, and crowding at his sides,
  3. and his great noble kinsmen thronging close around him,
  4. at the time when he whose ornaments rival lightning was going on his way,

What the poem says

The poet describes the huge retinue of Cukkirīvaṉ as he sets out to meet Irāmaṉ. Nine thousand crores of monkeys, an impossibly vast number, crowd before, behind and on either side of him, with his close kin surrounding him. His jewels flash like lightning. The sentence is left incomplete here and continues into the following verses describing the procession.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉpatiṉāyira kōṭi yūkam taṉ
muṉ cela piṉ cela maruṅku moyppuṟa
maṉ peruṅ kiḷaiñarum maruṅku cuṟṟuṟa
miṉ poru pūṇiṉāṉ cellum vēlaiyil.