கம்பராமாயணம் 4482 · கிட்கிந்தா 10.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நோன் கழல் - வலிய வீரக் கழலையும்; ஐய வில் குமரனும் - அழகிய வில்லையும் உடைய இலக்குவனும்; தானும் - சுக்கிரீவனும்; சேனை பின்பு ஒழிய - (உடன் வந்த) வானர சேனைகள் பின்னே தங்கவும்; அங்கதன் கைதுறந்து - அங்கதன் பக்கத்தை விட்டு; அயல் செல - ஒரு புறம் வரவும்; காதல் முன்செல - (இராமனைக் காண வேண்டுமென்ற) ஆசை முன்னே செல்லவும்; மானவன் இருந்த - இராமன் தங்கியிருந்த; மால்வரை - பெரிய மலையை; நொய்தினின் எய்தினன் - விரைவாகச் சென்றடைந்தான்.
பெரியவரிடத்துச் செல்லும்போது ஆடம்பரத்துடன் செல்லுதல் தகுதியாகாது. ஆதலால் இராமனிடம் செல்லும் சுக்கிரீவன் வானரசேனைகளை விட்டு அங்கதனும் சிறிது அப்பால் வரத் தான் தனியே செல்பவனானான் என்பது. இராமன் தங்கியிருந்த இடத்தை ஆர்வமிகுதியால் சுக்கிரீவன் வேகமாகச் சென்றதனால் வானர வீரரும் அங்கதனும் பின்னிட நேரிட்டது எனவும் கூறலாம். கழலுக்கு நோன்மை - பிறக்கிடாத தன்மை. காதல் முன்செல -இராமனைக் காணு முன்னரே காணவேண்டும் என்ற ஆசை முன் செல என்றவாறு. 'நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏற' (பெ. பு:கண்ணப்ப. 103) எனத் திண்ணனாருக்கு முன் அவர் கொண்ட அன்பு முன்னே சென்றதாகச் சேக்கிழார் குறிப்பிடுதல் இங்கே ஒப்புநோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He reached the great mountain where the man of Maṉu's line stayed,
- swiftly, the army left behind, the prince of the strong anklet
- and the fine bow and he himself, Aṅkataṉ leaving his side
- and keeping apart, and love running on ahead.
What the poem says
Cukkirīvaṉ and Ilakkuvaṉ reach the mountain where Irāmaṉ is staying. The army is left behind, and even Aṅkataṉ falls back to one side, since it is not fitting to approach a great one with pomp. Cukkirīvaṉ's eager love runs on ahead of him.
The commentary compares a line from Cēkkiḻār's Periya Purāṇam, where the hunter-saint Kaṇṇappar's love likewise climbs the hill before him.