கம்பராமாயணம் 4483 · கிட்கிந்தா 10.125

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கண்ணிய - யாவரும் கருதக் கூடிய; கணிப்பு அருஞ் செல்வம் - அளவிடமுடியாத (மிகப் பெருஞ்) செல்வத்தில்; காதல்விட்டு - ஆசையை நீத்து; அண்ணலை - இராமனின்; அடிதொழ அணையும் - திருவடிகளை வணங்குவதற்குப் பொருந்திய; அன்பினால் நண்ணிய - பக்தியோடு அடைந்து; கவிக் குலத்து அரசன் - வானர குலத்தலைவனான சுக்கிரீவன்; நாள்தொறும் - தினந்தோறும்; புண்ணியன் கழல் தொழு - புண்ணிய வடிவாகிய இராமனைத் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்ற; பரதன் போன்றனன் - பரதனையொத்து விளங்கினான்.

சுக்கிரீவன் இராமனிடம் கொண்ட பக்தி பரதனது பக்தியைப் போலும் என்பது. பரதன் செல்வப் பற்றுச் சிறிதுமின்றி இராமனுடைய பாதுகைகளை நாள்தோறும் வணங்கும் தன்மையன்; அரச போகத்தில் மூழ்கிக் கிடந்திடாமல் இராமனிடம் பக்திகொண்டு அப் பெருமானின் திருவடிகளை வணங்கி வரும் பரதனைச் சுக்கிரீவனுக்கு உவமைகூறினார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Giving up his love for prized and countless wealth,
  2. and drawing near with the devotion that comes to worship the noble one's feet,
  3. the king of the monkey race was like Paratan,
  4. who every day worships the feet of the holy one.

What the poem says

As Cukkirīvaṉ approaches Irāmaṉ, having turned away from the vast wealth he had been enjoying, he is compared to Paratan. Paratan, Irāmaṉ's brother, rules Ayōtti only as a regent: untouched by royal pleasures, he worships Irāmaṉ's sandals every day. Cukkirīvaṉ now shows the same devotion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṇiya kaṇippu aruñ celvak kātal viṭṭu
aṇṇalai aṭi toḻa aṇaiyum aṉpiṉāl
naṇṇiya kavik kulattu aracaṉ nāḷtoṟum
puṇṇiyaṉ toḻu kaḻal parataṉ pōṉṟaṉaṉ.