கம்பராமாயணம் 4484 · கிட்கிந்தா 10.126

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிறிவு அருந் தம்பியும் - பிரியாது எப்போதும் உடனிருக்கும் தம்பியாகிய இலக்குவனும்; பிரிய - பிரிந்து சென்றதால்; பேருலகு இறுதியில் - பெரிய உலகங்கள் யாவும் அழிந்துபடும் ஊழி இறுதியில், தான் என இருந்த - (தனித்து நிற்கும்) திருமாலாகிய தன்னைப் போன்று தனிப்பட்டிருந்த; ஏந்தலை - இராமபிரானை; (சுக்கிரீவன்); அறை மணித் தாரினோடு ஆரம் - (தனது மார்பில் பூண்ட) ஒலிக்கின்ற மணி மாலைகளும் முத்து மாலைகளும்; பார் தொட - பூமியில் படும் படி; செறி மலர் சே அடி - அடர்ந்த செந்தாமரை மலர் போன்ற சிவந்த திருவடிகளை; முடியின் தீண்டினான் - தனது தலையினால் தொட்டான் (திருவடிகள் சிரத்தில் படுமாறு வணங்கினான்.

பிரளயத்தின் இறுதியில் திருமால் தனியே தன்னைத் தானே பார்த்திருத்தலாகிய உண்மை இங்குக் கூறப்பட்டது. எப்போதும் பிரியாது உடனுறையும் தம்பியாகிய இலக்குவனையும் பிரிந்து தனித்திருக்கும் இராமனுக்கு யுகாந்த காலத்தில் தான்மட்டும் தனித்திருக்கும் திருமாலை உவமைகூறினார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great one, who, parted even from his inseparable brother,
  2. had remained alone like himself at the end of the vast world,
  3. he touched with his crown, at his red feet thick as flowers,
  4. while his ringing jewelled garlands and pearl strands touched the ground.

What the poem says

Cukkirīvaṉ bows to the ground before Irāmaṉ, so low that his garlands and pearl necklaces touch the earth, and touches Irāmaṉ's lotus feet with his head.

With Ilakkuvaṉ away, Irāmaṉ has been alone for the first time. The poet compares him to Vishnu, whose incarnation he is, remaining alone after the dissolution of the universe at the end of an age, with nothing left but himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṟivu arun tampiyum piriya pēr ulaku
iṟutiyil tāṉ eṉa irunta ēntalai
aṟai maṇit tāriṉōṭu āram pār toṭa
ceṟi malarc cēvaṭi muṭiyiṉ tīṇṭiṉāṉ.