கம்பராமாயணம் 4513 · கிட்கிந்தா 11.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குமுதனும் - குமுதன் என்னும் வீரனும்; கறங்கு போல்வன - காற்றாடி போல விரைந்து செல்வனவும்; காற்றினும் கூற்றினும் கடிய - காற்றைக் காட்டிலும் வேகம் உடையனவும், யமனைவிடக் கொடுமையுடையனவும்; பிறங்கு தெண்திரை - விளங்குகின்ற தெளிவான அலைகளையுடைய, கடல் புடை பெயர்ந்து எனப் பெயர்வ - கடல் இடம் விட்டு எழுந்தது போன்று செல்வனவும்; மறம் கொள் வானரம் - வீரம் கொண்ட வானரங்கள்; ஒன்பது கோடி எண் வகுத்த - ஒன்பது கோடியென்று கணக்கிடப்பட்டனவும்; திறம் கொள் வெம்சினப் படை கொடு - மனவலியும் உடல் வன்மையும் கடுமையான கோபமும் கொண்டனவுமான படைகளை உடன் கொண்டு; சேர்ந்தான் - வந்து சேர்ந்தான்.
கறங்கு - காற்றாடி; வானத்தில் சுழன்று செல்வதெனக் காரணக் குறியாயிற்று. கடிய - இரட்டுறமொழிதல்: காற்றினும் கூடிய கூற்றினும் கடிய என வேகத்தையும் கொடுமையையும் குறித்தவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Whirling like pinwheels, fiercer than the wind and than Death,
- moving as if the bright-waved sea had shifted from its place,
- with a strong army of fierce anger, valiant monkeys
- reckoned at nine crores, Kumutaṉ too arrived.
What the poem says
Kumutaṉ (Kumuda) arrives with nine crores of brave monkeys. They spin along like whirligigs, swifter than the wind and crueller than Death, and their advance is like the sea itself rising and moving from its bed. The word for "fierce" serves twice, meaning "swifter" with the wind and "crueller" with Death.