கம்பராமாயணம் 4514 · கிட்கிந்தா 11.16

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊழி பரவை பேரினும் - உலக முடிவுக் காலத்தில் கடல் பொங்கித் தனது நிலையைவிட்டு)ப் பெயர்ந்து வந்தாலும்; உலைவு இல - அழிவற்றனவாகிய; ஏழின் ஏழு நூறு ஆயிர கோடி என்று இசைந்த - நாற்பத்தொன்பதினாயிரங் கோடி என்ற கணக்கோடு பொருந்திய; பாழி நல் நெடுந்தோள்- வலிமை மிக்க அழகிய நீண்ட தோள்களோடு விளங்குகின்ற; கிளர் படை கொண்டு - வானரப் படையை உடன் கொண்டு; உலகினில் உயர்ந்த பூழி - பூமியிலிருந்து மேலே எழுந்த புழுதி; விண் புக - ஆகாயத்திற்குச் செல்லும்படி; பதுமுகன் என்பவன் - பதுமுகன் என்னும் தலைவன்; புகுந்தான் - வந்துசேர்ந்தான்.

ஏழின் ஏழு - பண்புத் தொகை: ஏழினால் பெருக்கிய ஏழு (நாற்பத்தொன்பது). உம்மைத் தொகையாகக் கொள்ளின் ஏழும் ஏழும் - ஏழொடு சேர்ந்த ஏழு - (பதினான்கு எனப் பொருள்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a rousing army of mighty, fine, long-shouldered troops, counted
  2. at seven times seven hundred thousand crores, which would not falter
  3. even if the ocean broke loose at the end of the age, the one called Patumukaṉ came in,
  4. so that the dust rising from the earth entered the sky.

What the poem says

Patumukaṉ arrives with forty-nine lakh crores of strong-shouldered monkeys, troops so steadfast they would not waver even if the ocean flooded the world at the end of time. The dust of their march climbs into the sky. "Seven of seven" means seven times seven, forty-nine, though the commentary notes it could also be read as seven and seven, fourteen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēḻiṉ ēḻu nūṟāyira kōṭi eṉṟu icainta
pāḻi nal neṭun tōḷ kiḷar paṭai koṇṭu paravai
ūḻi pēriṉum ulaivila ulakiṉil uyarnta
pūḻi viṇ pukap patumukaṉ eṉpavaṉ pukuntāṉ.