கம்பராமாயணம் 4515 · கிட்கிந்தா 11.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இடபனும் - இடபன் என்னும் வீரனும்; ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற - பதினான்கு என்று சொல்லப்பட்ட; உலகங்கள் எவையும் - எல்லா உலகங்களும்; தாழும் காலத்தும் - அழிகின்ற ஊழிக் காலத்திலும்; தாழ்வு இலா - அழிவில்லாத, தடவரைக் குலங்கள் - பெரிய மலைகளின் தொகுதிகள்; சூழும் தோற்றத்த - சூழ்ந்திருப்பது போன்ற தோற்றமுடையனவான; வலி கொள் - வலிமையைக் கொண்டுள்ள; பாழி வெம் புயத்து - வன்மை மிக்க கொடிய தோள்களோடு கூடிய; தொள்ளாயிரம் கோடி அரியொடும் - தொள்ளாயிரங் கோடி என்று கணக்கிட்ட வானர சேனையோடும்; படர்ந்தான் - வந்து சேர்ந்தான்.
உலகம் யாவும் அழியும் பிரளய காலத்திலும் அழியாது நிற்கும் மலைகள் இருப்பின், அம் மலைகளே இந்த வானர சேனைக்கு ஒப்பாகும் என்பது - இல் பொருளுவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking like ranges of great mountains that would not sink
- even when all the worlds, told as seven and seven, sink down,
- with nine hundred crores of strong monkeys
- with mighty, fierce shoulders, Iṭapaṉ too came on.
What the poem says
Iṭapaṉ (Ṛṣabha) arrives with nine hundred crores of monkeys with powerful shoulders. They look like great mountain ranges that would stand firm even when all fourteen worlds are destroyed at the end of the age. Since no such mountains exist, the poet is using a comparison with something imaginary to suggest strength beyond any real comparison.