கம்பராமாயணம் 4516 · கிட்கிந்தா 11.18

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தீர்க்கபாதனும், வினதனும், சரபனும் திரைக்கும்
மால் கருங்கடற்கு உயர்ந்துள மைம்முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ணருங் கோடி கொண்டு, அண்டமும் புறமும்,
போர்க்கும் பூழியில் மறைதர, முறையினின் புகுந்தார்.

பொருள் · Meaning in Tamil

தீர்க்க பாதனும் - தீர்க்க பாதனும்; வினதனும் சரபனும் - வினதனும் சரபனும்; திரைக்கும் மால் கருங் கடற்கு உயர்ந்து என - அலையெறிகின்ற பெரிய கரிய கடலைக் காட்டிலும் பெருந் தோற்றத்தையுடையனவான; ஆர்க்கும் எண்ண அரும் - எத் திறமுடையவர்க்கும் எண்ணிக் கணக்கிடமுடியாத; மை முகத்து அனிகம் கோடி கொண்டு - கறுத்த முகமுள்ள கோடிக் கணக்கான வானர சேனையை உடன் கொண்டு, அண்டமும் புறமும் - உலகவுருண்டையின் உள்ளும் புறமும்; போர்க்கும் பூழியில் மறைதர- மேலே எழுந்து மூடிக் கொள்ளும் புழுதியால் மறையும்படி; முறையினில் புகுந்தார் - ஒருவர்பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள்.

தீர்க்கபாதன்: நீண்ட காதலுடையவன். விநதன்: மிகவும் வணக்கமுடையவன். சரபன்: சரபப் பறவை (எட்டுக்கால் புள் போன்ற வலிமை வாய்ந்தவன்; இவன் மேகக் கடவுளின் மைந்தன். மைம் முகத்து அனிகம்: கருங்குரங்குகளின் படை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Tīrkkapātaṉ, Viṉataṉ and Carapaṉ, with a black-faced army
  2. greater than the vast dark wave-tossed sea,
  3. crores that no one at all could count, so that the cosmic egg and what lies beyond
  4. were hidden in the covering dust, came in one after another.

What the poem says

Three more commanders arrive in turn: Tīrkkapātaṉ ("long-footed"), Viṉataṉ ("humble") and Carapaṉ, named after the mythical eight-legged śarabha and said to be a son of the cloud god. Their black-faced monkeys, too many for anyone to count and vaster than the dark sea, raise dust that covers the whole universe inside and out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīrkkapātaṉum, viṉataṉum, carapaṉum tiraikkum
māl karuṅ kaṭaṟku uyarnteṉa maim mukattu aṉikam
ārkkum eṇṇa aruṅ kōṭi koṇṭu, aṇṭamum puṟamum,
pōrkkum pūḻiyil maṟaitara, muṟaiyiṉiṉ pukuntār.