கம்பராமாயணம் 4519 · கிட்கிந்தா 11.21

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கும்பனும் குலச் சங்கனும் முதலினர், குரங்கின்
தம் பெரும்படைத் தலைவர்கள் தர வந்த தானை,
இம்பர் நின்றவர்க்கு எண் அரிது; இராகவன் ஆவத்து
அம்பு எனும் துணைக்கு உரிய; மற்று உரைப்ப அரிது அளவே

பொருள் · Meaning in Tamil

கும்பனும் - கும்பன் என்பவனும்; குலச் சங்கனும் - சிறந்த சங்கன் என்னும் வீரனும்; முதலினர் - முதலானவர்களாகிய; தம் பெருங் குரங்கின் படைத்தலைவர்கள் - தம்முடைய பெரிய வானர சேனைத் தலைவர்கள்; தரவந்த - தம்முடன் திரட்டிக் கொண்டு வந்த; தானை - வானர சேனையானது; இம்பர் நின்றவர்க்கு எண்ண அரிது - இவ்வுலக மக்களாலும் கணக்கிட முடியாதது; இராகவன் ஆவத்து அம்பு என்னும் - இராமனின் அம்பறாத் தூணியிலுள்ள அம்புகளின்; துணைக்கு உரிய - அளவாமென்று சொல்லத்தக்க அளவுடையது (அல்லாமல்); அளவு மற்று உரைப்பரிது - அந்தப் படையின் அளவைப் பற்றி வேறு எவ்வகையிலும் சொல்லுவது அரியது.

இராமனது அம்புப் புட்டிலில் அம்புகள் அளவில்லாது நிறைந்திருப்பது போலக் கும்பன், சங்கன் ஆகியோரின் சேனைகளிலும் வானரங்கள் அளவற்று நிறைந்திருந்தன. ஆவம் - அம்புப் புட்டில், அம்பறாத்தூணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The army brought by Kumpaṉ, noble Caṅkaṉ and the others,
  2. the great commanders of the monkeys' own forces,
  3. is hard for those on this earth to count; it can be likened only to the arrows
  4. in Irākavaṉ's quiver; otherwise its measure is beyond telling.

What the poem says

Kumpaṉ, Caṅkaṉ and other commanders bring in yet more troops. No one on earth could count them; the only fitting comparison is with the arrows in Irāmaṉ's quiver, which never run out. Irākavaṉ (Rāghava, "descendant of Raghu") is a name of Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kumpaṉum kulac caṅkaṉum mutaliṉar, kuraṅkiṉ
tam perum paṭaittalaivarkaḷ tara vanta tāṉai,
impar niṉṟavarkku eṇṇa aritu; irākavaṉ āvattu
ampu eṉum tuṇaikku uriya; maṟṟu uraippu aritu aḷavē