கம்பராமாயணம் 4520 · கிட்கிந்தா 11.22

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்;
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்;
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்
காயின் வெங்கனல் கடவுளும் இரவியும் கரியும்.

பொருள் · Meaning in Tamil

தோயின் - (அங்கே திரண்ட வானர சேனைகள் படிந்து முழுகினால்; ஆழி ஓர் ஏழும் - ஏழு கடல்களும்; நீர் சுவறி வெண்துகள் ஆம் - நீர் வற்றி வெள்ளை நிறப் புழுதியாக மாறி விடும்; சாயின் - ஒரு பக்கமாகச் சாய்ந்தால்; அண்டமும் மேருவும்- பூமி மண்டலமும் மேரு மலையும்; ஒருங்கு உடன் சாயும் - ஒரு சேர உடனே (அந்தப் பக்கமாகச் சாய்ந்து விடும்; ஏயின் - எழுந்து உலாவினால், மண்தலம் - இந்தப் பூமி; எள் இட இடமின்றி இரியும் - எள் இடுவதற்கும் இடம் இல்லாமற்போகும், காயின் - சினம் கொள்ளுமாயின்; வெங்கனல் கடவுளும் - கொடிய அக்கினிதேவனும்; இரவியும் - சூரியனும்; கரியும் - வெந்து கருகிவிடும்.

ச் செய்யுள் வானர சேனையின் மி யையும், பெரு வலிமையையும் க்கிறது. இச் செய்யுள் அடிமறிமாற்றுப் பொருள்கோள் அமைப்புடையது. எந்த அடியை எங்கே கூட்டினும் பொருளும் ஓசையும் வேறுபடா.

ஏயின் - எழுந்து உலாவினால்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If they bathe, all seven oceans dry up and turn to white dust;
  2. if they lean, the world and Mount Mēru lean over together with them;
  3. if they move about, the whole earth is crowded, with no room left to drop a sesame seed;
  4. if they grow angry, even the god of fierce fire and the Sun are charred.

What the poem says

The poet now describes the might of the assembled host. If the monkeys bathed, the seven seas would dry to white dust; if they leaned, the world and Mount Mēru would tilt with them; if they moved about, not a sesame seed's space would be left on earth; if they grew angry, even the fire god and the Sun would be scorched black.

The four lines are independent and could be read in any order without changing sense or rhythm, a pattern Tamil grammarians name and admire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōyiṉ āḻi ōr ēḻum nīr cuvaṟi veṇ tukaḷ ām;
cāyiṉ aṇṭamum mēruvum oruṅkuṭaṉ cāyum;
ēyiṉ maṇṭalamum eḷ iṭa iṭam iṉṟi iriyum
kāyiṉ veṅ kaṉal kaṭavuḷum iraviyum kariyum.